’ஸ்விகி ஓட்டிய உதவி இயக்குநர்’ – மேடையில் கண்கலங்கிய அதர்வா பட இயக்குநர்

0
554
KuruthiAttam
- Advertisement -

ஸ்விகி ஓட்டி இருந்தார் என்னுடைய உதவி இயக்குனர் என்று மேடையில் ஸ்ரீ கணேஷ் கண்கலங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அதர்வா. வித்தியாசமான கதை தேர்வின் மூலம் பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் உருவெடுத்து இருப்பவர் அதர்வா. இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டு வெளிவந்த பானாகாத்தாடி என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன், பூமராங், இமைக்காநொடிகள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடைசியாக இவர் நடித்த படம் தள்ளிப்போகாதே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் அதர்வாவின் நடிப்பு பாராட்டப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து சில முக்கிய படங்களில் அதர்வா நடித்து வருகிறார்.

- Advertisement -

குருதி ஆட்டம் படம்:

அந்த வகையில் தற்போது அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குருதி ஆட்டம். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கிறார். 8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி, சக்கரவர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் தயாரித்து இருக்கிறார்.

குருதி ஆட்டம் செய்தியாளர்கள் சந்திப்பு:

மேலும், இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது மேடையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறியிருந்தது, படத்தின் தயாரிப்பாளர் முருகானந்தத்திற்கு நன்றி. 8 தோட்டாக்கள் படம் வெளியாகி ஒரே வாரத்திலேயே இந்த படம் பற்றி அதர்வா உடன் பேசினேன். அன்றிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக ரொம்பவும் அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். படத்தின் பாதி கதை சொன்னதுமே அவருக்கு பிடித்துவிட்டது.

-விளம்பரம்-

ஸ்ரீ கணேஷ் அளித்த பேட்டி:

பின் அவர் எழுந்து என்னை கட்டிப்பிடித்து நீங்க வேலையை ஆரம்பீங்க என்றார். செகண்ட் ஆஃப் கதை சொல்றேன் என்று சொன்னபோது வேண்டாம் உங்கள் மீது நம்பிக்கை இருக்கு என்றார். ஒரு நாள் அவரிடம் செகண்ட் ஆஃப் கதை சொன்னபோது இது இப்படி இருக்கலாமா? என்று கேள்வி கேட்டார். அந்த கேள்வி கதையை திருத்தி எழுத எனக்கு பெரிய உதவியாக இருந்தது. இன்றைக்கு வரைக்கும் படத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் வெளியானதும் அதில் நடித்த அனைவருமே அந்த கதாபாத்திரம் மூலமே அறியப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படத்தின் உதவி இயக்குநர்கள் கடைசி வரை என்னுடன் இருந்தார்கள்.

மேடையில் ஸ்ரீ கணேஷ் கண்கலங்கிய காரணம்:

இடையில் படம் நின்ற போது நம்மால் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து வேறு ஏதாவது பட வாய்ப்பு கிடைத்தால் போய் வேலை பாருங்கள் என்றேன். ஆனால், என்னுடைய உதவி இயக்குனர் குரு ஸ்விகி ஓட்டிக்கொண்டிருப்பதை ஒருநாள் பார்த்தேன். என்னடா என்று கேட்டபோது உங்க படம் ஆரம்பிக்கும்போது சொல்லுங்கள் நான் வந்து சேர்ந்திருக்கிறேன் என்று சொன்னார். அது என்னை மிகவும் பாதித்தது. பின் பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படத்தை எடுத்தோம். ஆழமான கதையம்சம் கொண்ட ஆக்சன் படமாக குருதி ஆட்டம் இருக்கிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கக் கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று மேடையில் கண்கலங்கிய படி கூறி இருந்தார்.

Advertisement