சனாதானம் குறித்து உதயநிதி பேசிய பேச்சுக்கு பா ஜ க சேர்த்த பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து குஷ்பூவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரங்கள் மிகவும் பரப்பரப்பாக இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் அவர்களுடைய கருத்து கூற அதற்க்கு எதிரணியில் இருப்பவர் மற்றொரு கருத்தை கூற என பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
உதயநிதி பேசியது:
சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.
எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது.
And the temple was built here, in Tamilnadu, where the DMK is comparing Sanatana Dharma to dengue, malaria n covid. They talk about eradicating Snatana Dharma, telling the people of Tamilnadu to give up on their beliefs and source of strength.
— KhushbuSundar (@khushsundar) September 4, 2023
திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது ஆனால் ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. நாம் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆனால் பாசிஸ்ட்கள் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது என்று செயல் பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் படிக்க கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம்.
மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறோம். இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது.
இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார்.உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்பட்ட நிலையில் பா ஜ க சேர்த்த பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பூ ‘முஸ்லிம் பெண் குளத்தில் இருந்து வந்த எனக்கு மக்கள் கோவில் கட்டினார்கள் அதுதான் சனாதான தர்மம்’ என்று பதிவிட்டுள்ளார்.