ஜோசப் எனும் முன்பெயர்,ஒத்த ஆளை பாத்து பீதி – ரஜினியை மீண்டும் சீண்டிய ப்ளூ சட்டை

0
895
bluesattai
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

-விளம்பரம்-
Vijay-Rajini

அதாவது, தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் கிருஷ்ணன், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடல் வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் காக்கா, கழுகு என்ற கதையை கூறி இருந்தார். இது யாரை குறித்து கூறுகிறார் என்று இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் சோசியல் மீடியாவில் பனி போரே நடந்திருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் டீவ்ட்:

இப்படி இருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை ஈட்டி இருப்பதால் மீண்டும் ரஜினி சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டார் என்று ரஜினிக்கு ஆதரவாக பலரும் கூறி கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது லியோ படம் வரட்டும் என்று விஜய் தரப்பில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு கடந்த வாரம் நடந்த ஜவான் படத்தின் விழாவில் கூட அட்லீ விஜய் குறித்து பேசி இருந்ததை சன் டிவி எடிட் செய்து போடுகிறது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ரஜினி குறித்து சொன்னது:

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஜோசப் எனும் முன்பெயர். பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கிங் மற்றும் செய்யாறு ஓலாக்களுக்கு எரிச்சலை தருவதைப்போல அவரது அரசியல் பிரவேச அறிகுறிகளும் சிலருக்கு கடுப்பை கிளப்பியுள்ளன. இன்னொரு பக்கம் இவர்தான் நம்பர் 1 வியாபார மற்றும் வசூல் சக்ரவர்த்தி எனும் உண்மை. வேறு தரப்பிற்கு பேதியை உண்டாக்கியுள்ளது. சூப் ஸ்டார் பட நிகழ்ச்சியில் விஜய்யின் மாஸ்டர் பாடல் நிறுத்தப்பட்டது. ‘பட்டத்தை பறிக்கறாங்க’ என்று பாடல் மூலம் அலறி துடித்தார் ஆறிப்போன சூப் ஸ்டார்.

விஜய் குறித்து சொன்னது:

இதுவரை அந்த உலகமகா பட்டம் பற்றி விஜய் வாய் திறக்கவே இல்லை. ஆனால், சூப்பின் அல்லக்கைகள் எல்லாம் ‘தலைவர் தான் ஒரே சூப் ஸ்டார். விஜய்க்கு தான் தளபதி பட்டம் இருக்கே? இதற்கு ஏன் ஆசைப்படுகிறார்?’ என்று ஓயாமல் உளறுகின்றன.
தற்போது ஜவான் நிகழ்ச்சியில் விஜய் குறித்து அட்லீ பேசியவை கட் செய்யப்பட்டன. ஆக மொத்த கரகாட்ட கோஷ்டியும் ஒத்த ஆளை பாத்து பீதியாகி இருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார்.

Advertisement