வாரிசு படத்துல நடிக்கலனு சொன்னாரே, அப்போ இது என்ன ? குஷ்பூ கொடுத்த விளக்கம்.

0
1303
Kushboo
- Advertisement -

விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று பொய் சொன்னது குறித்து குஷ்பூ விளக்கமளித்துள்ளார். பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபிஸிலும் இடமும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் கார்த்தியை வைத்து ‘தோழா’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இவர் தமிழில் இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் குஷ்பூவும் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேபோல நடிகர் விஜய்யுடன் குஷ்பூ எடுத்துக்கொண்ட புகைப்படமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால், இது குறித்து தெரிவித்த குஷ்பூ ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது விஜய் சந்தித்தேன் என்றும் விஜய் படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் வாரிசு படத்தில் நடித்துள்ள தன்னுடைய மாஜி ஹீரோக்களான பிரபு, சரத்குமார் ஆகியோரை சந்திப்பதற்காகவே அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாகவும் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் சமூக வலைதளத்தில் வைரலானது என்றும் குஷ்பு கூறி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு பணத்தின் சில எக்ஸ்கியூஸ் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை குஷ்பூ, விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

இதனால் குஷ்பூ வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று ஏன் பொய் சொன்னார் என்று நொடிஷன்கள் பலரும் கேள்வி கேட்டு வரும் நிலையில் இதுகுறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நடிகை குஷ்பூ ‘இந்த குடும்பத்தில் இணைந்து இருக்காது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரட்டும் என காத்திருந்தேன். அதனால் தான் நான் எதுவும் சொல்லவில்லை” என குஷ்பூ கூறி இருக்கிறார்.

Advertisement