தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என பல துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். அதே போல இவர் தீவிர காங்கிரஸ் கட்சியின் தொண்டர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனாலேயே இவனுக்கும் பி ஜே பி ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சமூக வலைதளத்தில் பனிப்போர் கூட நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பல பிரச்சனைகளும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நிக்காட்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் தளபதி விஜய் நடித்திருந்த “வாரிசு” பட ஷாட்டிங்கின் போது வாரிசு படத்தில் நடிக்கும் சரத்குமார் மற்றும் பிரபுவுடன் சில புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சோசியல் மீடியாவில் நடிகை குஷ்பு பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தால் நடிகை குஷ்பு வாரிசு படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுப்பபட்டது ஆனால் குஷ்பூ அதனை மறுத்துவிட்டார்.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் “வாரிசு” திரைப்படத்தில் குஷ்பு நடித்திருப்பதாக்க தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் மாம் சீசன்3″ல் தொகுப்பாளராகவும், சமீபத்தில் கமலஹாசனுடைய பிறந்தநாளில் “ஹாப்பி பர்த்டே கமலஹாசன்” என்ற சிறப்பு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார். இப்படி பிசியாக இருக்கும் குஷ்பூ சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக பல விஷியங்களில் பதிவிடுவார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு நேற்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டிருந்தார். அந்த பதிவில் `
தனிப்பட்ட நெருக்கடி காரணமாக சிறிது காலம் ஓய்வில் இருந்தேன். எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக ICUவில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தான் ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று நடிகை குஷ்பு அந்த பதிவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ரசிகர்களும் உங்களுடைய அண்ணன் விரைவில் குணமடைவார் என்று பதிவிட்டு வருகின்றனர்.