தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நடிகை குஷ்பூ 90களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

மேலும், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் குஷ்பூ அவர்கள் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இதனால் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை உருவ கேலி கிண்டல்களை செய்து இருந்தார்கள்.
குஷ்பூ மகள் குறித்த தகவல்:
மேலும், குஷ்புவின் மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி படித்து முடித்து இருக்கிறார். இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் சினிமாத்துறையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே மணிரத்தினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருந்தார். பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 , தக் லைப் போன்ற படங்களில் எல்லாம் பணியாற்றி இருந்தார். தற்போது இவர் ஆரம்பம் என்ற படத்தில் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். சுஜேஷ் இயக்கம் இந்த படத்தினுடைய பூஜை திருச்சூரில் நடைபெற்றது. இந்த படத்தில் அவந்திகா, சரிதா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அவந்திகா பேட்டி:
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் அவந்திகா, நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று சொன்னது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. கொஞ்சம் கடினமான இடம் பார்த்துக்கோ என்று சொல்லி சப்போர்ட் பண்ணினார்கள். அதற்கு பிறகு தான் என்னுடைய உடம்பை ட்ரீம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்து கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு வருகிறேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள்.

சினிமா வாய்ப்பு:
அம்மாவுக்கு கிடைத்த மாதிரி எனக்கு ரோல் கிடைக்கணும். அதற்கு அவங்க கொடுத்த உழைப்பு அக்கறை எல்லாமே எனக்கு அமையனும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கிறது. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும் என்று நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். எந்த பிரச்சனையும் அவர்களிடம் இருந்து எனக்கு வரவில்லை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன் அதற்காக தீவிரமாக இறங்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.






