‘இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் இஸ்லாம் பெண்களை கடத்தி சென்று’ – மசூதி முன்பு மிரட்டல் விடுத்த சாமியார். குஷ்பூ விளக்கம்.

0
309
Kushpoo
- Advertisement -

இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால், முஸ்லிம் பெண்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வேன்” என்று இந்து சாமியார் ஒருவர் மசூதி முன்பு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருகும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பா ஜ க உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ பதில் கொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர் ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தினார்.

-விளம்பரம்-

அப்போது சீதாபூரில் உள்ள மசூதிக்கு அருகே ஜீப் சென்ற போது, “இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவர் இவ்வாறு கூறியதும், அங்கிருந்த பெரும்பாலான மக்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டனர்.

இதையும் பாருங்க : நம்மல Entertain செய்ய, விஜய் ஒரு வருசத்துல இத்தனை நாள் வேல செய்றாரு, அளந்துவிட்ட அபிஷேக், கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

- Advertisement -

இந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு :

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் எழுந்தது. பின்னர், போலீஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் பேசிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘அல்ட் நியூஸ்’ என்ற செய்தி வலைதளத்தின் துணை நிறுவனர் முகமது ஜுபைர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த சாமியார் பேசிய வீடியோவை முகமது ஜூபைர் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டார்.

சீதாபூர் போலீஸார் விசாரணை :

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக பரவி பெரும்பாலானோரின் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.இப்படி ஒரு நிலையில் , இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சாமியார் பேசியது உண்மை என தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சீதாபூர் போலீஸார் தெரிவித்தனர்.

-விளம்பரம்-

குஷ்பூ விளக்கம் :

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர் நடிகை குஷ்பூவிடம் கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பூ, ஒவ்வொரு மனிதனும் இதை கண்டிப்பார். மனிதநேயம் எந்த அரசியல் கட்சிக்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு பெண்ணும் இந்த தாய்நாட்டின் மகள்கள். அவளுடைய கண்ணியத்தை பாதுகாப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஒரு பெண்ணைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் எப்போதும் செய்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

இது பாஜக அல்ல :

இதுகுறித்து மேலும் பதிவிட்டுள்ள குஷ்பூ, ஆனால் பாய் , இது நீங்கள் நினைப்பது போல் பாஜக அல்ல. ஒவ்வொரு வெறுப்பு பேச்சு அல்லது வகுப்புவாத பதட்டத்தையும் பாஜகவுடன் இணைப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது. எதிர்க்கட்சிகளிடம் இது வாடிக்கையாகி விட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​நமது நாட்டில் மிக மோசமான வகுப்புவாத உரிமைகளைப் பார்த்தோம். பாஜக மக்களுடன் நின்று பாதுகாக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement