இது நாளை உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படாது என நம்புகிறீர்களா குஷ்பூ ? – நெட்டிசன் கேள்விக்கு VCK கட்சியை குறிப்பிட்டு குஷ்பூ சொன்ன பதில்

0
626
kushboo
- Advertisement -

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. முஸ்லீம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்தால் இந்துத்துவா மாணவர்களும் காவிநிற துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்திருக்கிறார்கள். இதனால் கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் ஆர்ப்பாட்டமாக நிலவியிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அதில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு தொடுத்த மனு மற்றும் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is nsvnba.jpg

இந்த நிலையில் குந்தாபுராவில் உள்ள பியூ கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிஇருந்தனர். பின் இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் என்று கரகோஷம் எழுப்பினர். அப்போது அந்த இஸ்லாமிய மாணவி தனியாக நின்று கையை உயர்த்தி ‘அல்லாலாஹூ அக்பர்’ என்று கோஷம் எழுப்பி எனக்கு பயம் இல்லை என்பதை சத்தமாக கோஷம் போட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்த ட்விட்டர் வாசி ஒருவர் இந்தக் கொடுமையை கண்ட பிறகும் உங்களது கள்ளமவுனமும் சுயநலமும் அமைதி காக்கச்சொல்கிறதா? இதே தாக்குதலும் அச்சுறுத்தலும் #சங்பரிவாரக்கும்பலால் நாளை உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படாது என நம்புகிறீர்களா குஷ்பூ மேடம் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள குஷ்பூ ‘உங்களுடைய கட்சி பற்றி என்னிடம் பேசாதீர்கள். உங்களை விட எனக்கு நல்லா தெரியும்.

நினைவிருக்கட்டும் சில விடுதலை சிறுத்தை முரடர்களிடம் தன்னந்தனியாக போராடிவள் நான. நான் ஒரு பெண், அம்மா, ஒரு இந்தியன். என்னை விட வேறு யாரவது பலவீனமான பெண்ணிடம் போய் உன் மிரட்டலை காமி ‘ என்று பதில் அளித்துள்ளார். ஏற்கனவே ஹிஜாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்த குஷ்பூ ‘ கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் பற்றியது. பள்ளியில் சீருடை அணிந்ததற்காக நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காக.

-விளம்பரம்-

இதில் அரசியல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட இல்லை. யாரும் குறை கூறவில்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்?பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா? சரஸ்வதி அறிவின் சின்னம். சில பள்ளிகளில் சிலை அகற்றப்படுமா என்று கேட்பவர்கள், தயவு செய்து உங்கள் அறியாமையை வெளியில் காட்ட வேண்டாம் என்று கூறுகிறேன்.

This image has an empty alt attribute; its file name is nvnva-1024x452.jpg

நீங்கள் இயேசுவை கான்வென்ட்டில் ஏற்றுக்கொண்டால், அல்லாஹ்வை மதர்சாவில் ஏற்றுக்கொண்டால், ஏன் சரஸ்வதியை ஏற்கவில்லை? இதில் பாரபட்சமான அணுகுமுறை மிகவும் தெளிவாக உள்ளது. பள்ளி ஒரு மதம் அல்ல. பள்ளி என்பது நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் இடம் அல்ல. இது ஒழுக்கம் நிறைந்த இடம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கற்றலில் ஒற்றுமையையும் மரியாதையையும் காட்ட ஒரு விதியைக் கொண்டிருக்க வேண்டும்.

This image has an empty alt attribute; its file name is 1-231-1024x796.jpg

நீங்கள் வெளியில் என்ன உடுத்துகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். பள்ளிகளில் நடத்தை விதிகளை மதிக்க வேண்டும். கற்றலை மதிக்கவும். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நம் குழந்தைகள் நமது பெருமை. அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் ஏன் ஆர்வம் காட்டுகின்றன? ஒரு கையால் கைதட்ட முடியாது. அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களை ஒருவரையொருவர்எதிர்மறையாக பிணைக்கக்கூடாது. எல்லாம் அரசியலாக இருக்க முடியாது.

Advertisement