நடிகை குஷ்புவிற்கு சுந்தர் சி ப்ரொபோஸ் செய்திருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். பின் குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து இருக்கிறார்.
அதிலும், இவர் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
குஷ்பூ அரசியல்:
தற்போது குஷ்பூ படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பு. அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாக தாக்கி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி குஷ்பூ பாஜக-வில் இணைந்துக் கொண்டார். மேலும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்று இருக்கிறார்.
குஷ்பூ திருமணம்:
தற்போது இவர் அரசியல், சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சினிமாவில் பிரபலமான திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை 2001ம் ஆண்டு நடிகை குஷ்பூ அவர்கள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு பெண்கள் உள்ளார்கள். இதில் இளைய மகள் விரைவில் சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் குஷ்பூ. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
குஷ்பூ காதல் கதை:
மேலும், திருமணத்திற்கு முன்னரே 5 வருடங்கள் குஷ்பூ மற்றும் சுந்தர் சி காதலித்து இருந்துள்ளனர். குஷ்பூ காதல் கதை: குஷ்பூவிடம் முதலில் காதலை சொன்னது சுந்தர் சி தான். சுந்தர் சி காதலை சொன்னதும் உடனே குஷ்பூவும் ஏற்றுக்கொண்டார். தற்போது வரை இவர்கள் அழகான தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் குஷ்பூ பதிவிட்டிருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்:
அதாவது, 28 வருடங்களுக்கு முன்பு 1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுந்தர் சி குஷ்புக்கு ப்ரொபோசல் செய்திருக்கிறார். ப்ரபோஸ் செய்த பின் இரண்டு நாட்கள் கழித்து இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் தற்போது குஷ்பூ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, காலம் மிக வேகமாக செல்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.