90 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தவர்கள். இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
குஷ்பூ திரைப்பயணம்:
அதுமட்டும் இல்லாமல் இவர் “அவ்னி சினிமாக்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார். இதில் ரஜினியின் முறைப்பெண்ணாக குஷ்பூ நடித்து இருப்பார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது.
My 1st day at school of politics. Remembering my fav teacher with fond memories. 🙏🙏🙏#happyteachersday2023 pic.twitter.com/KshdN46DSK
— KhushbuSundar (@khushsundar) September 5, 2023
குஷ்பூ அரசியல்:
இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தார் குஷ்பு. அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாக தாக்கி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்துக் கொண்டார்.
ஆசிரியர் தினம்:
மேலும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குஷ்பு பதிவிட்டு இருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, செப்டம்பர் 5 இன்று ஆசிரியர் தினத்தை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதில் பலருமே தங்களின் ஆசிரியர்களுக்கெல்லாம் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள்.
குஷ்பூ பதிவு:
அந்த வகையில் குஷ்புவும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய அரசியல் ஆசானான முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரை நினைவுபடுத்தி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அரசியல் பள்ளியில் எனது முதல் நாள். என் விருப்பமான ஆசிரியரை இனிய நினைவுகளுடன் நினைவு கூருகிறேன் என்று கலைஞருடன் நின்று கொண்டிருக்கிற படத்தைப் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலருமே இவர் எப்போதும் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு கொண்டு அடிக்கடி கலைஞரை குறித்து பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.