1.5 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு அரசு இலவச திட்டங்களை குறை கூறிய நபர் – கோபி கொடுத்த பதிலடி.

0
255
- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சியில் ரயில்வே ஊழியரை கோபிநாத் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது “நீயா நானா” நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதிலும் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா”. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி:

சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிராக இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இப்படி கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் தரப்பிலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த வாரம் நிகழ்ச்சியில் அரசியல் மோசம் என்று சொல்வது தவறானது vs அரசியல் மோசம் என்று சொல்பவர்கள் ஆகிய தலைப்பில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

ரயில்வே ஊழியர் சொன்னது:

அந்த வகையில், இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் என்று ரயில்வேயில் வேலை செய்து ரிட்டயர் ஆன நபர் ஒருவர் தம் கட்டி பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கோபிநாத் புரிய வைத்தும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர், சலுகை என்ற பெயரில் இப்படி எல்லாம் பிச்சை எடுக்க கூடாது என்று எல்லை மீறி பேசியிருக்கிறார். இதை பார்த்து கொந்தளித்த கோபிநாத், பிச்சை எடுக்குறாங்க என்று சொல்லக்கூடாது.

கோபிநாத் கொடுத்த பதிலடி:

நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க? உங்கள் சம்பளம்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். உடனே அவர், நான் ரயில்வேயில் வேலைப்பார்த்து ரிட்டயர்மென்ட் ஆகி இருக்கிறேன். 1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் என்றார். உங்களுக்கு ரயில்வேயில் செல்ல பாஸ் இருக்கா? என்றார். இலவசமாக எங்கு வேண்டுமானாலும் போவேன் என அந்த நபர் சொன்னார். பின் கோபிநாத், ஒரு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு டிக்கெட் கூட காசு கொடுத்து வாங்க முடியாமல் ஓசியில் வாங்குறீங்களே, 2 கிலோ அரிசியை இலவசமாக ஏழை மகள் வாங்கினால் அது தவறா? என்றெல்லாம் பேசி இருக்கிறார். இதை பார்த்து பார்வையாளர்கள் பயங்கரமாக கைதட்டி உற்சாகம் செய்திருக்கிறார்கள்.

Advertisement