விடாமுயற்சி படம் குறித்து பதிவை லைக்கா மாற்றம் செய்துள்ளது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
Wishing the man of Persistence, Passion and Hard work 🫡 Our dearest #AjithKumar sir a Happy B'day 🥳
— Lyca Productions (@LycaProductions) April 30, 2023
It’s time for Celebration now…! 🥳🎉🎊
Our next film with Mr. #AK is titled #VidaaMuyarchi 💪🏻 "EFFORTS NEVER FAIL" and will be directed by the cult film-maker… pic.twitter.com/9uFcnjJIv4
அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
துணிவு படம்:
மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி ஏகே இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.
Lyca pinned tweet is no longer #VidaaMuyarchi
— Carpe Noctem (@iravaadi) September 5, 2023
🙌 Hopefully Magizh got out of this shitshow too. https://t.co/GchQSeSOsJ
விடா முயற்சி படம்:
அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. அஜித்தின் திரைப்பட வரிசையில் V என்ற வார்த்தை துவங்கும் டைட்டிலில் இது 10வது முறை. அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
~lyca removed #VidaaMuyarchi pinned tweet for #Chandramukhi2 release….#Leo pic.twitter.com/oQRc3oWDD2
— Alter♻️Ego (@_EnnaVaazhkaDa_) September 5, 2023
படம் குறித்த தகவல்:
இந்த படத்தில் முதல் முறையாக அஜித் பாட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அஜித் அவர்கள் லண்டனில் வெளிநாட்டு பிட்னஸ் பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் லைக்கா நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திருந்தார்கள்.
லைகா நிறுவனம் :
இதனால் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளி செல்கிறது என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு ஏற்றார் போல் படம் குறித்து எந்தவித தகவலுமே இணையத்தில் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை ட்விட்டரில் Pin செய்து வைத்து இருந்த லைகா நிறுவனம் தற்போது அதை நீக்கி இருக்கிறது. இதனால் இந்த படம் கைவிட படுகிறதா என்று மீண்டும் பேச்சுக்கள் எழ துவங்கி இருக்கிறது.