அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிம்பு,விஜய் பட ஹீரோயின் – கணவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ.

0
681
Simbu
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை நடிகர்களை விட நடிகைகள் தான் விரைவில் காணாமல் போய்விடுவார்கள். அதிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்த பல நடிகைகள் திருமணத்திற்கு பின் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில் தளபதி விஜயுடன் ‘மதுர’ மற்றும் சிம்புவுடன் ‘தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரக்சிதா. இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருக்கிறார் ரக்சிதா.

-விளம்பரம்-

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த போகவே அரசியலில் ஒரு கை பார்க்க களம் இறங்கினார். முதலில் பி.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்தவர் பின்னர் ‘குத்து’ ரம்யாவிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியில் கங்கிரசுக்கு எதிராக களம் இறக்கப்பட்டார். இருந்தும் அரசியலில் பெரிதாக ஜொலிக்க முடியாத ரக்சிதா, கன்னட நடிகர் ப்ரேமை கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

- Advertisement -

கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே உடல் பெருத்து இவரா இது? என்னும் அளவிற்கு மாறிப்போனார் ரக்சிதா. இந்நிலையில் கால் எலும்பு முறிந்து தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கால் முறிவிற்கு கட்டு போடப்பட்டு மருத்துவமனையில் உள்ளது போல் ஒரு போட்டோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார் ரக்சிதா.

அதில் மதுர படத்தில் ‘சிக்கென்று’ இருந்த நடிகை ரக்சிதா தானா? இவர் என்னும் அளவிற்கு இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ரக்‌ஷிதாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement