பொழைக்க 30% தான் வாய்ப்புன்னு சொன்னாங்க – கேன்சரில் இருந்து மீண்டு வந்த காதலர் தினம் பட நடிகை.

0
381
sonali
- Advertisement -

1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரா, நாசர், கவுண்டமணி இவர்களின் நடிப்பில் வெற்றி நடை போட்ட படம் தான் காதலர் தினம். இந்த படத்தின் பாடல்களும் அனைத்துமே வெளியான நாள் முதல் இப்பொழுதுவரை ஹிட்டான பாடல்கள். இந்த படத்தில் வரும் “என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வருவேன்” என்ற பாடல் சோனாலி பிந்த்ரா அவருக்காகவே எழுதிய பாடல் போல்வே இருக்கும். அந்த வகையில் படத்தில் அவருடைய அழகும் நேர்த்தியான நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி அவர் காதலர் தினம் படத்தில் மூலமாக பாலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் சோனாலி.

-விளம்பரம்-

இவ்வாறாக சோனாலி பாலிவுட்டில் பிசியாக நடிகையாக வலம் வந்தார். சோனாலி 2002 ஆம் ஆண்டு இயக்குனரும், தயாரிப்பாளருமான கோல்டி ஹெபில்லை திருமணம் செய்து கொண்டு. தனது சினிமா வாழ்வுக்கு டாட்டா பாய் பாய் சொல்லிவிட்டு இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார். மேலும் 2005 ஆம் ஆண்டு சோனாலிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதன் பின்பு சினிமாவுக்கு டாட்டா பாய் பாய் சொன்நார் சோனாலி.

- Advertisement -

சினிமா To தொலைக்காட்சி :

அதன்பின்னர் இந்தி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொள்ள ஆரம்பித்தார். இவ்வாறாக குடும்பம் தொலைக்காட்சி நிகழ்ச்சி என சந்தோசமாக இருந்த சோனாலிக்கு நான்கு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட நிகழ்வு அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று சொல்லலாம்.நான்கு வருடங்களுக்கு 2018 ஆம் ஆண்டு சோனாலிக்கு திடீரென மார்பகத்தில் வலி அதிகமாக ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு சென்ற சோனாலிக்கு அதிர்ச்சியாக அதிர்ச்சியான சம்பவம் காத்திருந்தது.

சோனாலிக்கு மார்பக புற்றுநோய் :-

ஆம் அவரே சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் சோனாலி மனமடைந்து போனார் மேலும் நான் பிழைப்பதற்கு 30 சதவீதம் தான் வாய்ப்பு உள்ளது என மருத்துவர் அவரிடம் கூரியது சோனாலியே இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இது அவர் குடும்பத்தினரையும், குழந்தைகள், கணவர் என அனைவரையும் சோகக்கடலில் தள்ளியது.

-விளம்பரம்-

நியூயார்க்கில் அறுவை சிகிச்சை :-

மருத்துவர்கள் ஆலோசனைப்படி நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்றிருந்தேன். நியூயார்க்கில் நான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருந்தது 24 அங்குலம் நீளத்தில் அறுவை சிகிச்சை செய்து ஸ்ட்ரெச்சிங் போட்டார்கள். மேலும் மருத்துவர்கள் நீங்கள் எவ்வளவு வேகமாக எழுந்து நடக்கிறீர்களோ அவ்வளவு வேகமாக நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று என்னிடம் கூறினார்கள். மேலும் அவர்கள் என்னிடம் கிளினிக்கல் இன்பெக்சன் ஏற்பட்டு விடக்கூடாது என்று சொன்னார்கள் அதில் அவர்கள் அதிக கவனத்துடன் இருந்தார்கள் என நானும் அவர்களுக்கு ஒத்துழைத்தேன். எனவே அறுவை சிகிச்சை முடிந்த ஒரே நாளில் மருத்துவமனையின் ஹால் பகுதியில் நடக்க ஆரம்பித்து விட்டேன்.

தற்போது செய்தியாளர் சந்திப்பில் சோனாலி பேசியது :-

சிசைக்கு பின் சோனாலி தனது வழக்கமான சகஜ வாழ்க்கைக்கு திரும்பினார் இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த சோனாலி நான்கு வருடங்களுக்கு முன்னர் இருந்த கேன்சர் இப்போது மாறி இல்லை இப்பொழுது அது சகஜமாக மாறிவிட்டது. மேலும் எனக்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உயிர் பிழைப்பதற்கு இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். நான் இப்போது அதிலிருந்து மீண்டு வந்து விட்டேன் என்னுடைய இன்ஸ்டாகிராம்மில் பதிவிட்ட விழிப்புணர்வு மூலம் நிறைய பேர் கேன்சருக்கு சோதனை மேற்கொண்டது சந்தோசமாக உள்ளது என செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இப்போது நான் அந்த உரையாடலை ஏற்றுக்கொள்கிறேன் எனக்கு கூறினார் மேலும் கேன்சரில் இருந்து வெளிவந்த சோனாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோட்டிவேஷன் பதிவு கேன்சர் குறித்த விழிப்புணர்வு பதிவாக போட்டுக் கொண்டு வருகிறார்.

Advertisement