ராட்சசன் கிறிஸ்டோபர் நடித்துள்ள ‘குற்றப்பின்னணி’ எப்படி உள்ளது – விமர்சனம் இதோ

0
421
- Advertisement -

இயக்குனர் NP இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குற்றப் பின்னணி. இந்த படத்தில் ராட்சசன் சரவணன், தீபாவளி, சிவா, ஹனிஃபா, பாபு, நேரு, லால், அக்மல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜீத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் ஆயிஷா அக்மல் தயாரித்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கதாநாயகன் ராட்சசன் சரவணன் பழனியில் வசித்து வருகிறார். இவர் காலையில் நேரத்திலேயே எழுந்து வீடு வீடாக பால் வியாபாரம் செய்கிறார். இதனுடன் இவர் தண்ணீர் கேன் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் ஹீரோ வாழ்க்கையில் புயல் வீசியது. இவர் வழக்கம் போல் பால் கொடுக்கும் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -

அங்கு இருக்கும் பெண்ணை யாரோ கொலை செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை போலீசார் விசாரிக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு வீட்டிற்குள் இருக்கும் தம்பதியை சரவணன் கொலை செய்கிறார். ஆனால், இந்த இரண்டு கொலைகளுமே ஒரே பாணியில் தான் இருக்கிறது. கொலையாளி யார்? சரவணன் ஏன் கொலை செய்தார்? போலீஸ் இது எல்லாம் கண்டுபிடித்தார்களா? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

ராட்சசன் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த சரவணன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பால் வியாபாரம், தண்ணீர் கேன் என்று ஏழ்மையில் இருக்கும் ஒரு அப்பாவி நபர் போல் நடித்திருக்கிறார். திடீரென்று இவர் கொடூரமான கொலையாளியாக மாறும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தினுடைய ஒளிப்பதிவும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை ஓகே. சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் கொண்டு சென்று இருக்கிறார். ஆனால், மேக்கிங்கில் சில குறைகள் இருக்கிறது.

கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற இடத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு பிரபலமான நடிகர்களை வைத்து இந்த கதையை கொடுத்திருந்தால் இன்னும் மக்கள் மத்தியில் சென்றடைந்திருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

கதைக்களம் அருமை

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

சமூகத்திற்கு ஒரு நல்ல மெசேஜ்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்படைய வைத்திருக்கிறது

கதைக்களம் கொண்டு சென்ற இடத்தில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில்-குற்றப்பின்னணி – முயற்சி

Advertisement