தனிமையில் இருந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்த இசையமைப்பாளர்- புகார் அளித்த பெண் (பின்னணி இது தான்)

0
642
music
- Advertisement -

தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இசை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இசையமைப்பாளர் பெயர் சபேஷ் சாலமன். இவர் கானா பாடகர். சென்னை பெரியார் நகரை சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் மீது புகார் ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த புகாரில் அவர் கூறியிருந்தது, நானும் என் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்தோம். அந்த நேரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அப்போது தான் கானா பாடல் ஆல்பம் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் உடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்பாக ஆறுதலாக அவர் என்னுடன் பேசி இருந்தார். பின் அவர் ஆரம்பத்தில் நட்புடன் தான் என்னுடன் பழகினார்.

- Advertisement -

சபேஷ் சாலமன் மீது புகார் அளித்த பெண்:

ஒரு கட்டத்தில் தனிமையில் இருக்கும் அளவிற்கு எங்களுக்குள் நெருக்கமான நட்பும் வளர்ந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தனிமையில் இருந்த என்னுடைய ஆபாச படங்களை சபேஷ் சாலமன் தன்னுடைய மொபைல் போனில் எடுத்து வைத்திருந்தார். இது குறித்து எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. மேலும், ஒரு கட்டத்தில் கானா இசை அமைப்பாளர் சபேஷ் சாலமன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கி இருந்தார்.

சபேஷ் சாலமன் செய்த கொடூர வேலை:

இதனால் அவருடைய நட்பை நான் முடித்துக் கொண்டேன். பின் என்னுடைய கணவருடன் சமாதானம் ஏற்பட்டு நாங்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கி விட்டோம். ஆனாலும், சபேஷ் சாலமன் விடாது மீண்டும் மீண்டும் செல்போன் மூலம் எனக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே வந்தார். அத்துடன் நான் தனிமையில் இருக்கும் போது எடுத்த ஆபாச புகைப்படங்களை என்னுடைய கணவர் உள்ளிட்ட உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி இருந்தார்.

-விளம்பரம்-

சபேஷ் சாலமன் மிரட்டல்:

அதுமட்டும் இல்லாமல் சபேஷ் சாலமன் நடத்தி வரும் யூடூயூப் பக்கத்திலும் அந்த ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து சபேஷ் சாலமனிடம் கேட்டபோது, என் ஆசைக்கு நீ இணங்க வேண்டும். இல்லை என்றால் உன்னை தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டி இருந்தார். அந்த மிரட்டலையும் அவர் பாடலாக பாடி எனக்கு அனுப்பி இருந்தார். இதை அடுத்து நான் சபேஷ் சாலமன் உடைய தந்தையிடம் கூறி இருந்தேன்.

தலைமறைவான குற்றவாளி:

ஆனால், அவரும் சபேஷ் சாலமன் உடன் சேர்ந்து என்னை மிரட்டுகிறார். சபேஷ் சாலமன் கைது செய்யுங்கள் என்று அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார். இப்படி அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கானா இசை அமைப்பாளர் சபேஷ் சாலமனை தேடி வருகின்றது. ஆனால், அவர் தலைமறைவாக இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Advertisement