தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.
இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இதையும் பாருங்க : மினி ஷகிலா போல படு குண்டாக மாறியுள்ள SMS பட நடிகை – வெப் சீரிஸில் உச்சகட்ட கிளாமர். வைரலாகும் வீடியோ.
இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாஸர், சுதீப், தம்மனா, அனுஸ்கா, சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக சாதனையை படைநத்தது. இப்படி ஒரு நிலையில் பாகுபலி வெப் தொடராக உருவாக இருக்கிறது.
பாகுபலி முதல் பாகத்திற்கு முன் என்ன நடந்தது என்பதை தான் இந்த வெப் தொடரின் கதை. பிரம்மாண்ட பொருட்ச்செலவில் உறவாக இருக்கும் இந்த வெப் தொடரில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி தேவி யங் வெர்ஷனில் நடிக்க இருக்கிறார். இந்த வெப் தொடர் மூலம் முதல் முறையாக OTT தளத்திலும் கால் பதித்துள்ளார் நயன்.