எனக்கு விருது எங்கே ? ஒரு மணி நேரமா அசிங்கமா போச்சிப்பா. வைரலான வீடியோவிற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்.

0
316
lakshmi
- Advertisement -

விருது பட்டியலில் தன்னுடைய பெயர் விடுபட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விருது பெறுபவர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் சினிமா நடிகர் நடிகைகள், தொலைக்காட்சிக்கு வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கு என்று தமிழ்நாடு சார்பில் விழுது வழங்கப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த விருது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரசும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சின்னத்திரை கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் இந்த விருதுகளுக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது.இது ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : வைரலாகும் வனிதாவின் ‘Karma’ பதிவு – ரவீந்தருக்கு போட்டதாக ரசிகர்கள் கமண்ட். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

தமிழ்நாடு மாநில விருது:

அதில் 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை. தற்போது தமிழ்நாடு அரசு இந்த விழாவை நேற்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பாபு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விருது பட்டியலில் விடுபட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் பெயர்:

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் விழாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விருதை வாங்க வந்திருந்தார். ஆனால், விருது வழங்கும் போது விருதுக்கான பட்டியலில் அவருடைய பெயர் இடம் இடம்பெறவில்லை என்றும் இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அங்கிருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பி இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.

விசாரித்த அதிகாரிகள்:

அதன் பின்பு அதிகாரிகள் நடந்த தவறை விசாரித்தாகவும். பின் நடந்த தவறை உணர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனை சமாதானப்படுத்தியதாகவும். அது மட்டுமில்லாமல் விருதுக்கான பட்டியலில் விடப்பட்டுள்ள பெயர்களை கண்டுபிடித்து லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பல பேருக்கு விருது வழங்கிஇருந்ததாகவும் பிரபல செய்தி சேனல் வீடியோ வெளியிட்டு இருந்தது. விருது பெற்ற பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு:

அதில் அவர், பல வருடங்கள் கழித்து தமிழ்நாடு அரசின் மாநில விருது கிடைத்தது. முதலமைச்சர், நடுவர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு நன்றி. விழாவில் சிலருடன் எனது பெயர் விடுபட்டது. அந்த நேரத்தில் அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர்கள் குழு காணாமல் போன பெயர்களை விரைவாகக் கண்டுபிடித்து விருது வழங்கி இருந்தார்கள் என தெரிவித்திருந்தார். மேலும், தவறான வீடியோ வெளியிட்ட செய்தி சேனல் குறித்து வீடியோ ஒன்றும் வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement