உண்மைதான என்று சிலர் டெஸ்ட் செய்ய போன் செய்கிறார்கள், வேதனையாக இருக்கும். பசியாற்றும் லட்சுமி அம்மாள்.

0
1660
lakshmi-ammal
- Advertisement -

கொரோனா வைரஸினால் உலகமே ஸ்தம்பித்துப் போய் என்ன செய்வது என்று புரியாமல் உள்ளது. இந்த நிலைமை எப்போது மாறுமோ? என்று மக்கள் கவலையில் உள்ளார்கள். உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசினால் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 2095 பேர் பாதிக்கப்பட்டும், 57 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்து உள்ளார். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் பிரதமர் மோடி.

-விளம்பரம்-

ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர் என பலர் பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் விராலிமலையை சேர்ந்த லட்சுமி அம்மா என்ற நபர் ஒருவர் இலவசமாக உணவு தந்து வருகிறார். விராலிமலை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கம்பியில் விளம்பர போர்டு ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது. அதில் வெளியூரில் இருந்து விராலிமலை பஸ் ஸ்டாப்பில் வந்து தவிப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார். போன் செய்த பத்து நிமிடத்திலேயே அவர் சாப்பாடு செய்து வந்து கொடுக்கிறார்கள்.

சாப்பாட்டுக்கு காசு பணம் எதுவுமே வாங்க வில்லை. இலவசமாக தான் செய்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து விராலிமலை பேருந்து நிறுத்தத்தில் சாப்பாடு இன்றி தவிக்கும் நபர்களுக்கு சாப்பாடு செய்து கொடுக்கிறார் லட்சுமி அம்மா. இவருக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிறது. பசியுடன் இருப்பவர்கள் சாப்பாடு வேண்டும் என்று போன் செய்து அடுத்த 10 நிமிடங்களில் செய்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோருக்கும் சாப்பாடு கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இதுகுறித்து மகாலட்சுமி அம்மாவிடம் கேட்டபோது அவர் கூறியது, ஊரடங்கு உத்தரவு போட்ட தினத்தில் எங்க வீட்டு பக்கத்தில் வந்த ஒருத்தர் ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டார். தண்ணீரைக் கொடுத்துட்டு எந்த ஊர் என்று விசாரித்தால் அவர் வெளியே ஊர் என்று சொன்னார். அப்ப தான் நான் பஸ் ஸ்டாண்டில் பலரும் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் தவித்து வரும் நிலைமை புரிந்தது. அதற்குப் பிறகு தான் அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு வருகிறேன். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் தான் எங்களுடைய வீடு இருக்கிறது.

போர்டில் என்னுடைய போன் நம்பர் எழுதி வைத்து இருக்கிறேன். அடுத்தடுத்து எங்களுக்கு அழைப்புகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. உடனே நாங்கள் உணவு செய்து கொண்டு போய் கொடுப்போம். போலீஸ் அங்கங்கே சுற்றி திரிவதால் கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. ஆனால், ஒரு சில பேர் போன் பண்ணி சாப்பாடு இருக்கா? என்று கேட்பார்கள். வேகமாக சாப்பாடு செய்து கொண்டு போனால் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். திரும்ப அவர்களுக்கு போன் செய்து கேட்டால் சும்மா சாப்பாடு கிடைக்காமா என்று டெஸ்ட் பண்ணிப் பார்த்தோம் என்று சொல்வார்கள்.

அது தான் மனசுக்கு கொஞ்சம் வேதனையாக இருக்கிறது. ஆனாலும், அதையெல்லாம் தூக்கி போட்டு மறுபடியும் சமைக்க கிளம்பிடுவோம். நானும், என் வீட்டுக்காரரும் தான் இருக்கிறோம். என் மகன் விபத்தில் இறந்து விட்டான். அவன் நினைவாக தான் நாங்கள் இதை தொடர்ந்து செய்து வருகிறோம். அதில் ஒரு பகுதியாகத் தான் இப்போ சாப்பாடு செய்து கொடுக்கிறோம். எங்களுக்கு சொந்தமாக பாத்திரம் கடை உள்ளது. அதில் ஓரளவு வருமானம் வருகிறது. அதை வைத்து தான் இந்த சேவையை செய்து கொண்டிருக்கும். தொடர்ந்து நாங்கள் இந்த சேவையை செய்ய ஆண்டவன் எங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என்று கூறினார்

Advertisement