தன்னார்வ தொண்டு நிறுவன மூலம் 167 பள்ளிகளை தத்தெடுத்த மாநாடு பட நடிகை. குவியும் வாழ்த்துக்கள்.

0
1947
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் லட்சுமி மஞ்சு. இவர் நடிகை மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார். பின் இவர் 2008 ஆம் ஆண்டு ‘The Ode’ என்ற ஆங்கில திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சில ஆங்கில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்த மோகன் பாபுவின் ஒரே மகள் ஆவார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி உள்ள படம் அக்னி நட்சத்திரம்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட்ப்ரோடக்ஷன் பணிகள் பிஸியாக நடந்து வருகிறது. இப்படி இவர் படங்களில் பிஸியாக பணியாற்றி வந்தாலும் சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் டீச் ஃபார் சேஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளை தத்து எடுத்து இருக்கிறது. கிட்டத்தட்ட 167 பள்ளிகளை இந்த நிறுவனம் தத்து எடுத்து இருக்கிறது. இதன் நோக்கம் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுதான்.

- Advertisement -

தன்னார்வ தொண்டு நிறுவனம்

அது மட்டுமில்லாமல் இந்த அமைப்பின் மூலம் புதுமையான கற்பித்தல் முறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த முறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தின் மூலம் 16,497 மாணவர்கள் தற்போது பயன் அடைந்து இருக்கிறார்கள். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் லட்சுமி மஞ்சு பார்வையிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த அமைப்பின் மூலம் பள்ளிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு பணியாற்றுவது மட்டும் இல்லாமல் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் லட்சுமி பயிற்சி அளிக்கிறார்.

நிறுவனம் குறித்த தகவல்:

ஆடியோ- வீடியோ பாடத்திட்டத்தை வடிவமைப்பதை உருவாக்குதல், பாடத்திட்டங்கள் பற்றி அறிக்கைகளை உருவாக்குவதோடு குழந்தைகளுடைய முன்னேற்றத்தை கணக்கிடுதலும் லட்சுமி மஞ்சு தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக லட்சுமி மஞ்சு கூறி இருப்பது, நான் பல பணிகளை விரும்பி செய்வது செய்கிறேன். அதற்கேற்ப என்னுடைய அட்டவணையை நான் சரியான முறையில் திட்டமிடுகிறேன். என் குழு உடன் அனைத்து நேரங்களிலும் பயணிக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும், தனிப்பட்ட முறையில் உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளையும் கலந்து கொள்கிறேன். என்னுடைய பணிகளுக்கு உறுதுணையாக என்னுடன் பயணிக்கும் என்னுடைய குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் நினைக்கிறேன்.

-விளம்பரம்-

லட்சுமி மஞ்சு அளித்த பேட்டி:

மேலும், கல்வியாண்டு முழுவதும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். அவர்களுடைய ஆதரவு எங்களுடைய திட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்கின்றன. ஹைதராபாத், ரங்கா ரெட்டி, யாதாத்ரி, ஸ்ரீகாகுளம் மற்றும் கட்வால் போன்ற பல மாவட்டங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கி இருக்கிறோம். மற்ற மாவட்டங்களிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்க முயற்சித்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் அதிக மாணவர்களின் வாழ்க்கையில் இந்த திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

தொண்டு நிறுவனம் குறித்து சொன்னது:

தெலுங்கானா அரசாங்கத்துடன் டீச் ஃபார் சேஞ்ச் ஒத்துழைப்பு என்பது தத்தெடுப்பு திட்டம் மட்டும் இல்லை. இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மற்றும் டீச் பார்க் சேஞ்ச் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைமை முக்கியத்துவத்தை கூறி வருகிறோம். அரசு பள்ளிகளில் குறிப்பாக தற்போது கிராம பகுதிகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசாங்கங்கள் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.

Advertisement