விரைவில் வெளியாக இருக்கும் KH234 படத்தின் டீசர் அப்டேட். உறச்சாகத்தில் கமல் ரசிகர்கள்.

0
1264
- Advertisement -

கமல்ஹாசன் நடிக்க இருக்கும் புதிய படங்கள் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்” என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

ப்ராஜெக்ட் கே படம்:

அதாவது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ப்ராஜெக்ட் கே. இந்த படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசன் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக கமலுக்கு இந்த படம் அமையும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கமல் 21 கெட்டப் போட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கமலஹாசன் -வினோத் கூட்டணி:

இதன் பின் இயக்குனர் ஹச் வினோத்தின் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு கே எச் 223 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஆள்வதற்காக எழுதல் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் (RISE to RULE) என்ற வாசகத்தை இணைத்துள்ளனர். மேலும், படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணி:

இதனை அடுத்து மணிரத்தினத்துடன் இணைந்து கமலஹாசன் பணியாற்ற இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த டீசர் குறித்து அப்டேட் வெளியாகி இருக்கிறது.

படத்தின் அப்டேட்:

தற்போது அமெரிக்காவில் இருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் அந்த படத்திற்க்கான டீசரின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பதிவு செய்கிறார். இவர் இதற்கு முன்பு வெளியான மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் ஆயுத எழுத்து போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத் துணை இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.    

Advertisement