6 ஆண்டுகள் கழித்து பிரம்மாண்ட படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன். எந்த படத்தில் தெரியுமா ?

0
711
lakshmi
- Advertisement -

பிரம்மாண்டமாக உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடிகை லட்சுமி மேனன் நடிக்க உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சந்திரமுகி.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் கன்னட படமான அபாமித்ராவின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் மனநல மருத்துவராக இருப்பார். தன் நண்பனின் மனைவியை காப்பாற்ற தன் உயிரையும் பணயம் வைத்து போராடுவர் ரஜினி. அதேபோல் இந்த படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : விஜய்யும் அஜித்தும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துக்கொள்ளும் இடம் – அடுத்த குண்டை தூக்கி போட்ட கங்கை அமரன்.

சந்திரமுகி படம்:

அது மட்டுமில்லாமல் காலம் கடந்தாலும் இந்த படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் அசத்தலான ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பில் சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படமாக இருந்தது. பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான படமாக சந்திரமுகி இருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் பலரும் பிறகு கேட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

சந்திரமுகி 2 படம்:

அந்த வகையில் 17 வருடங்கள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இவருடன் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் :

இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை லட்சுமிமேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் திரிஷா இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. தற்போது லட்சுமி மேனனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

6 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி :

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. படம் குறித்த தகவலும் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகை லட்சுமி மேனன் தமிழிய இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ரெக்க’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement