தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கபட்ட லட்சுமி மேனன், தொடர் தோல்வி படங்களால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். தற்போது பிரபு தேவா நடித்து வரும் யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனன் பேசுகையில் ஒருமுறை என்னைப் பற்றிய ஒரு பொய்யான வீடியோ பரவியது. அது பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து, எனக்கு ஆதரவாக எல்லோரும் பேசினாலும், அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வர எனக்கு சில வாரங்கள் தேவைப்பட்டது.
அந்த சமயத்துல என்னால நார்மலா இருக்க முடியல. மனதளவில் ரொம்ப அவதிப்பட்டேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துட்டேன். இப்போது, நான் என் வேலைகளில் கவனமா இருக்கேன். அவரை மாதிரி இருக்கணும், இவரை மாதிரி இருக்கணும்னு நினைக்கும்போது தான் பிரச்சினை வரும்.
இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதனால், பிரேக், பிரச்சினைகள்… எதையும் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன். எப்போவும் சந்தோஷமா இருக்கணும், நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோஷமா வெச்சுக்கணும்… அவ்ளோதான். என்றார்.