உங்க அம்மாவா இப்படி பண்ணா சும்மா இருப்பயா.! லயலோவால் கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!

0
1520
- Advertisement -

சென்னையில் உள்ள பிரபல லயோலா கல்லூரியில் நடத்தப்பட்ட ஓவிய கண் காட்சியில் காட்சிபடுத்தப்பட்ட புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில் ஓவிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற சில புகைப்படங்களில் இந்து கடுவுள்களை ஆபாசமாக சித்தரித்து சில ஓவியங்கள் இருந்தது.

- Advertisement -

இத்தயையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க லயோலா கல்லூரி சார்பாக அதற்கு மன்னிப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் லயோலா கல்லூரியின் இந்த செயலை கண்டித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு ட்விட்டர்வாசி ஒருவர் , இதில் என்ன கண்டனம் தெரிவிக்க இருக்கின்றது என கேட்க ‘உங்க அம்மாவை திட்டினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?. எனக்கு என் மதம் தான் அம்மா’ என்று ஆவேசமாக திட்டி தீர்த்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

-விளம்பரம்-
Advertisement