சமுதாயத்திற்கு முக்கியமான படம் “ஆர் யூ ஓகே பேபி” சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படம்.

0
1636
- Advertisement -

தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை. இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும்.

-விளம்பரம்-

மேலும் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். அவ்வப்போது அவர் போடும் பதிவுகளை சர்ச்சையாகவும் மறுவதுண்டு. அதற்கு அவர் தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது தயாரித்து இயக்கி வரும் திரைப்படம் தான் “ஆர் யூ ஓகே பேபி” இந்த படத்தில் முக்கிய நடிகர்களான இயக்குனர் மிஸ்கின், அபிராமி, சமுத்திரக்கனி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும் முதன் முறையாக தன்னுடைய படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க வைக்க வைக்கவுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

இப்படிபட்ட நிலையில் தான் இப்படத்தை பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில் “இப்படத்தின் கதையானது தற்போது உள்ள சமுதாயத்திற்க்கு சொல்ல வேண்டிய ஒரு கதையாகும். இப்படம் குழந்தையை மையப்படுத்தி அமைந்துள்ளதால், அப்படத்தின் தலைப்பும் அப்படியே பொருத்தமாக இருக்க “ஆர் யூ ஒகே பேபி” என்று வைத்ததற்கு காரணம். மேலும் எனக்கு விஜய் சேதுபதி ஒரு படத்தில் “ஆர் யூ ஓகே பேபி என்று கூறியது பிடித்திருந்த்து, எனவே அதனையே தலைப்பாக வைத்துளோம்.

இப்படத்தில் நடக்கும் மிஸ்கின் நான் ஒரு போன் செய்ததும் எங்கே, எப்போது வரவேண்டும் என்று மட்டும் தான் என்னிடம் கேட்டார்.இப்படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இருக்கிறது. அதனை இளையராஜா எழுதியுள்ளார். மேலும் அவருடைய இசை இந்த பாடலை வேறு இடத்திற்கு கொண்டுசென்று விட்டது. இந்த படம் கண்டிப்பாக சமுதாயத்திற்கு நல்ல படமாக இருக்கும். இந்த படத்தை நான் நடத்திய நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement