தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு நாற்காலி வாங்க பணமில்லாத ஏழையா ராஜா ? – விமர்சித்த ரசிகருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதிலடி.

0
309
lakshmi
- Advertisement -

லட்சுமி ராமகிருஷ்ணனின் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இளையராஜாவை சந்திக்கும் போது கீழே அமர்ந்ததை பார்த்து கேள்வி கேட்டவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் கொடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை. இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும். இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அது எவ்ளோ பெரிய டுபாக்கூர் கம்பெனியா இருக்கும் – மோகனுக்கு கிடைத்த விருதை கேலி செய்த சவுக்கு சங்கர். அவரின் பதிலடி.

லட்சுமி ராமகிருஷ்ணனும் சர்ச்சைகளும் :

அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார்.

-விளம்பரம்-

இளையராஜா லக்ஷ்மி கூட்டணி :

அந்த வகையில் இவர் வனிதாவின் நான்காம் திருமணத்திற்கு பஞ்சாயத்து செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். இறுதியாக இவர் ‘House Owner’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இவர் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவலை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இவர் தான் இயக்கும் படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

தரையில் அமர்ந்ததை விமர்சித்த நெட்டிசன் :

இவர் இயக்கும் படத்திற்கு இசைஞானி தான் இசை அமைக்கிறார். அதற்கான ரீ-ரெக்கார்டிங்கில் லட்சுமி காத்திருக்கிறார். மேலும், இவர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் இளையராஜாவை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ட்விட்டர் வாசி ஒருவர் ‘நீங்கள் ஏன் தரையில் அமர்ந்திருந்தீர்கள்? திரு.ராஜா தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு நாற்காலி வாங்க பணமில்லாத ஏழையா?

லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதில் :

அதை அறிந்து மிகவும் வருத்தமாக உள்ளது. திரு.ராஜா எங்கு சென்றாலும் மரியாதை கேட்கிறார். அவர் சமத்துவத்தை மற்றவர்களுக்கு கொடுக்கட்டும்’ என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்க்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் ‘தனது திறமையை உருவாக்கியவர், மூத்தவர், #ராஜா சார் கடவுளுக்கு நிகரானவர், அவரது காலடியில் அமர முடிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடைய இடத்திற்குச் செல்லும்போது அதையே செய்வது மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் தரையில் அமர்வது ஆரோக்கியத்திற்கு நல்லது நண்பரே, சுதந்திரத்தின் 76வது நாள் வாழ்த்துக்கள்’ என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Advertisement