சிக்காவை லைவில் திட்டி தீர்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் – சிக்கா வெளியிட்ட பரிதாப வீடியோ.

0
12160
sikka
- Advertisement -

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராம கிருஷ்ணன் டிக் டாக் பிரபலமான சிக்காவை திட்டி தீர்த்துள்ளார். என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு நிஜமான சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘ நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். மேலும், இவர் திரைப்பட நடிகையாகவும் , இயக்குனராகவும் திகழ்ந்து வருகிறார். இதுவரை 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் டிக் டாக் பிரபலமான சிக்கா என்னும் சிக்கந்தரை திட்டி தீர்த்துள்ளார். சமூக வலைதள பொழுது போக்கு ஆப்பான டிக் டாக் செயலி மூலம் பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். இதில் ரவுடி பேபி சூர்யா மூலம் பிரபலமடைந்தவர் தான் இந்த சிக்கா. ஏற்கனவே பல திருமணம் ஆன ரவுடி பேபி சூர்யாவுடன் ஏற்கனவே திருமணம் ஆன இவர் தற்போது வாழ்ந்து வருகிறார்.

இதையும் பாருங்க : வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்ட வனிதா – நேற்று BB ஜோடி எபிசோட் ஒளிபரப்பாவதற்கு முன் வனிதா போட்ட ட்வீட்.

- Advertisement -

அடிக்கடி இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வது பின்னர் ஒன்றாக சேர்ந்து வீடியோ போடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ரவுடி பேபி சூர்யாவால் சிக்காவும் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோவில் சிக்கா படு மோசமாக கமன்ட் செய்துள்ளார்.அதில், ஹே, லட்சு நான் லவ்வர் பாய், லேடீஸ் ப்ரோக்கர் என்று கமெண்ட் செய்து உள்ளார். இதனால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த நயங்கள எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கனும்.

பொறுக்கி நாய்ங்கள, உங்க வீட்ல அம்மா அக்கா தங்கச்சி இல்ல திருந்தவே மாட்டிங்களா டா, பொறுக்கி நாய்ங்களா, இவன் எல்லாம் எப்படி இந்த உலகத்துக்கு வந்தான். அம்மா பெத்து தான வந்தான் என்று திட்டி தீர்த்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள சிக்கா, அது என் பெயரில் இருக்கும் போலி ஐடி மேடம் அது என் ஐடி இல்லை மேடம்.இதெல்லாம் நம்பாதீங்க மேடம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement