வெளியேற்றப்பட்ட வனிதா – நேற்று BB ஜோடி எபிசோட் ஒளிபரப்பாவதற்கு முன் வனிதா போட்ட ட்வீட்.

0
6276
Vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் வனிதா . இதில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விள்குவதாக அறிவித்து இருந்தார் வனிதா. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வனிதா, அதில், ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்களை வயதில் மூத்தவர்கள் வென்று விடுவார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

-விளம்பரம்-
Image

அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்கள் என்று கூறி இருந்தார். வனிதா சீனியர் நடிகை என்று சொன்னது ரம்யா கிருஷ்ணனை தான் என்பது பலருக்கும் தெரியும்.ஆனால், ரம்யா கிருஷ்ணனிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது நோ கமெண்ட்ஸ் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். இந்த எபிசோடுக்காதான் பலரும் காத்துகொண்டு இருந்தனர்.

இதையும் பாருங்க : குழந்தையில் பெண் குழந்தை போல மேக்கப் போட்டு அழகு பார்த்துள்ள ம க பாவின் பெற்றோர்கள் (அக்மார்க் 90ஸ் கிட்ஸ் போல )

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்று இந்த எபிசோட் ஒளிபரப்பானது. அதில் ரம்யா கிருஷ்ணன் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசியதால் கடுப்பான வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவித்தனர். ஆனால், வனிதா ஏதோ தானாக வெளியேறியது போல கூறி இருந்தார். மேலும், மார்க் போடும் போது கூட வனிதா இல்லை.

வனிதா மற்றும் சுரேஷ் பர்பாமன்ஸிற்கு ரம்யா கிருஷ்ணன் 1.5 மதிப்பெண் தான் கொடுத்து இருந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் தொடர்ந்து புலம்பி கொண்டு இருக்கும் வனிதா, நான் ஒரு உண்மையான போராளி. ஒரு உண்மையான மனிதர். நான் எனது தேர்வுகளைச் செய்ய உரிமை உண்டு. எனக்கு பிடிக்காதது எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. திறமைகளை மதியுங்கள். ஒரு நாள் உங்கள் இடத்திற்கு அவர்கள் வருவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement