6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபரின் தற்போதைய நிலையை பதிவிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
3220
lakshmi
- Advertisement -

சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் 6 வருடங்களுக்கு முன்னர் குத்துயிரும் கொலையுருமாக வந்த நபரின் தற்போதைய நிலையை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு சொந்தக்காரரான லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

-விளம்பரம்-

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு முன்னாள் இந்த நிகழ்ச்சியை செய்தி வாசிப்பாளரான நிர்மலா சீதா ராமன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பின்னர் தான் இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்தது. லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் பிரபலமானது என்னவோ இந்த நிகழ்ச்சியின் மூலம் தான்.

- Advertisement -

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, தான் விலகப்போவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தான் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதால், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்றாற் போல இந்த நிகழ்ச்சியின் மீது சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கும் தொடர்ந்து இருந்தார். அதனால் தான் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் 6 வருடங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி படு காயம் அடைந்து சிகிச்சை பெற முடியாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது அந்த நபரின் தாய், தனது மகனை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார். இந்த நிலையில் அந்த நபரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement