பிறந்தநாள் விழாவில் திருமாவளவனை புகழ்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 62-வது பிறந்தநாளை அவருடைய விசிக தொண்டர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த விழாவில் மது மற்றும் போதை ஒழிப்பு கருப்பொருளை மையமாக வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி இருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=GhWIcYIgC8g
இதில் விசிக பொதுச் செயலாளர்கள் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, துரை.ரவிக்குமார் எம்.பி., பிற எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்கிரண், லட்சுமி ராமகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் நீலவேணி முத்து ஆகியோர் கலந்து கொண்டு இருந்தார்கள். பின் இந்த விழாவில் திருமாவளவன், போதைப் பொருளால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்று பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
திருமாவளவனின் 62-வது பிறந்தநாள்:
இந்நிலையில், இவரை அடுத்து விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னது, அண்ணன் திருமா அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரை முதன்முதலாக பார்த்தவுடன் அவருடைய தோற்றம் என்னுடைய அண்ணனை தான் நினைவிற்கு கொண்டுவந்தது. எனக்கு நான்கு அக்கா, ஒரு அண்ணன். என்னுடைய அண்ணன் இல்லை. அவரை பார்த்தவுடன் எனக்கு என்னுடைய அண்ணன் ஞாபகம் தான் வந்தது. திருமாவை நான் முதன்முதலாக பேட்டி எடுக்கும் போது, உங்களை அண்ணா என்று கூப்பிட்டு கொள்ளலாமா? என்று கேட்டேன்.

விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன்:
அவர் உடனே கூப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார். அந்த அளவிற்கு ஒரு இனம் புரியாத அன்பு அவரை அண்ணன் என்று கூப்பிடும் போது வந்தது . மேலும், அவரை அண்ணன் என்று கூப்பிட காரணம், மக்களுக்காக அவர் செய்யும் தன்னலமற்ற சேவை. எது நடந்தாலும், எவ்வளவு பிரச்சனை வந்தாலும், மக்களுக்காக எதையும் கொடுக்கும் துணிச்சல். இப்படித்தான் என்னுடைய அண்ணன் இருப்பார். அதை நான் அவரிடம் பார்க்கிறேன்.
https://www.youtube.com/watch?v=sCGYUvukJPs
திருமா குறித்து சொன்னது:
நான் தினமும் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லித்தான் எழுவேன். நாள் முழுவதுமே ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால் தான் போகும். ஆனால், இங்கு எனக்கு எதிராக பல கருத்துக்கள் சொன்னார்கள். இருந்தாலும், எனக்கு கோபமோ, ஆத்திரமோ வரவில்லை. காரணம், இங்கு ஒரு கனெக்ட் இருக்கிறது. எல்லோருமே ஒரு அணுவில் இருந்து வந்தவர்கள் தான். சக மனிதர்கள் மீது அன்பு செய்ய வேண்டும். எல்லோருமே ஒன்று. ஜாதி, மதம் எல்லாம் தேவை இல்லை, முக்கியம் கிடையாது. ஆனால், ஆன்மீகம் முக்கியம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்த தகவல்:
தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். மேலும், இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். சமீப காலமாக இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.






