இந்த மாதிரியான கேவலமான படத்தில் பெண்களும் நடிக்க ஓகே சொல்லி இருக்காங்க – அனிமல் படத்தை கழுவி ஊற்றிய லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
448
- Advertisement -

அனிமல் படத்தை விமர்சித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ராஷ்மிகா மந்தனா-ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் அனிமல். இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

தந்தை-மகன் இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழி ஐந்து மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் நல்ல வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் பெண்களுக்கு எதிரானது, படம் முழுவதும் ஆண் சிந்தனை இருப்பதாக விமர்சித்திருக்கின்றார்கள்.

- Advertisement -

அனிமல் படம்:

இந்த படம் குறித்து கடுமையான சர்ச்சைகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றது. திரைப்பிரபலங்கள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த படத்தை விமர்சித்து பேட்டி அளித்து இருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அனிமல் படம் நல்லா இருக்கு. ஆனா, ரொம்ப வக்கிரமா இருக்கு என்று கிண்டலாக விமர்சித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் பேட்டியில், அனிமல் படத்தை பார்த்தேன். வக்கரத்தின் உச்சம்தான் சொல்லணும். சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினம் தோறும் நடந்து கொண்டு வருகிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி:

இப்படி ஒரு சூழ்நிலையில் ஆண் அதிகத்துடனும், அதிக வன்முறைகளும், பிற்போக்குத்தனம் நிறைந்த படமா அனிமல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாலியல் தொழிலாளி அல்லது ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினை பற்றி படம் எடுக்கிறோம், பேசினோம் என்றால் தவறில்லை. ஆனால், அதை எப்படி காண்பிக்கிறோம், அந்த திரைக்கதையில் அந்த காட்சி அவசியமா? அந்த காட்சியை எப்படி படம் ஆக்கனும்? என்பது தான் முக்கியம். உதாரணத்திற்கு, அனிமல் படத்தில் திருமணக் காட்சியில் அத்தனை பேர் முன்னிலையில் வில்லன் அந்த பெண்ணிடம் வக்கிரமாக நடந்து கொள்ளும் விதம் எரிச்சலாக இருந்தது.

-விளம்பரம்-

ராஷ்மிகா குறித்து சொன்னது:

அதே மாதிரி கொலைகளை இவ்வளவு ரத்தம் சிந்தி அதிக வன்முறையுடன் காட்ட வேண்டுமா? இப்படி சில சீன்கள் ரொம்ப அருவருப்பாக இருந்தது. ராஷ்மிகா முன்னணி நடிகையாக இருக்கிறார், நல்லா நடித்திருக்கிறார். ஆனால், அவர் இந்த படத்தில் நடிக்கும் போது தவறான கருத்துக்கள் இன்னும் மக்களை போய் சேரும். பெண்களை தவறாக சித்தரிக்கும் இது போன்ற கதைகளில் ராஷ்மிகா நடிக்க யோசிக்க வேண்டும். இந்தப் படத்தை எடுப்பவர்களோட மனதில் எவ்வளவு வக்கிரம் இருக்கும். அவர்களுடைய மனதுக்குள் இருக்கும் மொத்த வக்ரத்தையும் கொட்டி இருக்காங்க. படத்தை பார்த்து முடித்ததுமே என்னால தாங்க முடியாமல் தான் கிண்டலாக பதிவு பண்ணேன். ஆனால், ரசிகர்கள் வேற மாதிரி எடுத்துக் கொண்டார்கள்.

படம் குறித்த விமர்சனம்:

இப்படி ஒரு மோசமான படத்துக்கு வெளிப்படையாக திட்ட முடியாது. இந்த மாதிரியான கேவலமான படத்தில் பெண்களும் நடிக்க ஓகே சொல்லி இருக்காங்க. மக்களும் பார்த்து வெற்றியடைய வைக்கிறாங்க. அனைவரும் ஒன்றிணைந்து எங்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி படம் வேண்டாம் என்று நினைத்து புறக்கணித்தால் எவனும் வக்ரபுத்தியுடன் படம் எடுக்க மாட்டான். குடும்பத்துடன் வந்து பார்த்து மகிழ்ந்து ரசிக்கும் படி படம் எடுக்கணும். ஆனால், இந்த மாதிரி படத்தை எல்லாம் பார்த்தா வக்ரபுத்தி தான் சமூகத்தில் உருவாகும். இளம் தலைமுறை தவறான வழிக்கு தான் செல்வார்கள். இந்த படத்தை பார்த்து விட்டு படுத்தால் இரவில் கேவலமான கனவுகள் தான் வருகிறது. அப்படி இந்த படம் இருக்கிறது என்று கோபத்துடன் ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார்.

Advertisement