சரவணன் மீனாட்சி லஷ்மிக்கு காலேஜ் படிக்கிறா வயசுல பொண்ணு இருக்கா..? புகைப்படம் உள்ளே

0
4177
saravanan meenatchi
- Advertisement -

`நடிப்பு பற்றி எந்த இலக்கும் இல்லாமல்தான் ஆக்டிங் ஃபீல்டுக்கு வந்தேன். 13 வருஷம் முடிஞ்சுடுச்சு. ஆரம்பம் முதல் இப்போ வரை பரபரப்பில்லாம, நிதானமா மனநிறைவுடன் நடிச்சுட்டிருக்கேன்” எனப் புன்னகைக்கிறார், நடிகை லஷ்மி வாசுதேவன். விஜய் டிவியின் `சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்துவருபவர். அவரிடம் உரையாடியதிலிருந்து…

-விளம்பரம்-

vasudevan

- Advertisement -

சீரியல் என்ட்ரி பற்றி.
சன் டிவி `ஆனந்தம்’ என் முதல் சீரியல். அதில், போலீஸ் இன்ஸ்பெக்டரா நடிச்சேன். மாடலிங்கில் நடிப்புக்குப் பெரிய வாய்ப்பு இருக்காது. `ஆனந்தம்’ சீரியல் மூலம் பர்ஃபார்மன்ஸ் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு கிடைச்சுது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என இருபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சிருக்கேன். `

சரவணன் மீனாட்சி’ நல்ல அடையாளம் கொடுத்துச்சு. சீரியலின் சீசன் 2-ல் கலகலப்பான அம்மாவா நடிச்சேன். இப்போ, சீசன் 3-ல் நெகட்டிவ் அம்மாவா மிரட்டுறேன். முன்பெல்லாம் சீரியல்னா, ரெகுலரா வொர்க் இருக்கும். மக்கள் மனசுல தொடர்ந்து இடம்பிடிக்க முடியும். இப்போ, டி.ஆர்.பி உள்ளிட்ட காரணங்களுக்காக, அடிக்கடி மாற்றங்கள் வருது. ரொம்ப இடைவெளிவிட்டு நடிக்கிற ஃபீல் உண்டாகுது. அந்த நிலை மாறணும்.

-விளம்பரம்-

saravanan meenachi

Lakshmi-vasudevan-daughter

 

இளமையா இருக்கீங்க’னு சோஷியல் மீடியாவில் உங்களுக்கு நிறைய பாராட்டுகள் வருதே…”

“சோஷியல் மீடியாவில் என் ஒரு போட்டோவை அப்லோடு பண்ணினா, `நீங்க இளமையா இருக்கீங்க; உங்க இளமை ரகசியம் என்ன?, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க?’னு நிறைய கமென்ட்ஸ் வரும். அதெல்லாம் எனக்குக் கோபத்தையே உண்டாக்கும். அம்மா ரோலில் நடிச்சாலும், என் மகளாக/மகனாக நடிக்கிறவங்களுக்கும் எனக்கும் சில வயசுதான் வித்தியாசம் இருக்கும். கேரக்டர்படிதான் 50 பிளஸ்ல என் வயசு இருக்கும். நிஜத்திலும் அந்த வயதில் இருக்கணும்னு அவசியமில்லையே. என் பொண்ணு காலேஜ் படிக்கிறாள்.

lakshmi vasudevan

lakshmi actress

actresslakshmi

அப்போ, என் வயசு என்ன இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், இளமையா இருக்கேன். அது மிக அவசியம் என நம்புறேன். வெளியிடங்களில் என் அழகு மற்றும் தோற்றம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்பாங்க. அதனால், `ஏன்தான் அம்மா ரோலில் நடிக்க ஆரம்பிச்சோமோ’னு சில நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு. இனி அம்மா ரோலில் நடிக்கக் கூடாதுனுகூட சில நேரங்களில் நினைப்பேன்.

Advertisement