இணையத்தில் வைரலாகும் மணி டிக் டாக்.! வீடியோ பார்த்த லட்சுமி ராமக்ரிஷ்ணன் ரியாக்ஷன்.!

0
1841
Lakshmi-Ramakrishnan
- Advertisement -

என்னமா எப்படி பண்றீங்களமே என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இரண்டு நபர்கள் தான் ஒன்று விஜய் டிவியின் என்னமா ராமர், மாற்றுருவர் இந்த வசனத்திற்கு சொந்தக்காரரான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘லட்சுமி ராம கிருஷ்ணன். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

-விளம்பரம்-

சமூக ஆர்வலரான இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை ” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் . மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ள இவர், தமிழில் 3 பாடங்களையும் இயக்கியுள்ளார். தற்போது’ ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தையும் இயக்கியள்ளார்.

இதையும் பாருங்க : வாரம் ஒரு தலைவர் டெய்லி ஒரு சண்டை.! பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ இதோ.! 

- Advertisement -

பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, தான் விலகப்போவதாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தான்.

-விளம்பரம்-

மேலும், இவரது நிகழ்ச்சியை பல்வேறு திரைப்படங்களில் கலாய்த்து உள்ளனர். இந்த நிலையில் டிக் டாக்கில் ட்ரெண்டிங் பாய்ஸ் என்ற பெயரில் இரண்டு இளைஞர்கள் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பேசியதை டிக் டாக் செய்து வருகின்றன. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிரியாது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி ராமகிருஷ்ணனிடம், அந்த இளைஞரகள் செய்த வீடியோ குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அந்த வீடியோவை நான் 1000 முறை பார்த்துள்ளேன். அந்த பசங்க இருவரும் செமயா பண்ணி இருக்காங்க. இதே போன்ற விஷத்தை சினிமாவில் ஒருத்தன் காசுக்காக செய்தான்.

ஆனால், இந்த பசங்க காசுக்காக இதை செய்யவில்லை. இந்த பசங்கள நான் பார்க்கும் போது இவர்களுக்கு எவ்வளவு டேலண்ட் இருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன். இந்த பசங்களுக்கு அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்ணின் கஷ்டம் புரியாது. எதோ ஜாலிக்காக செய்கிறார்கள் அப்படி தான் நாம் அதை பார்க்க வேண்டும். ஆனால், சினிமாவில் காசுக்காக ஒருத்தன் செய்தான் பாரு அவனை தான் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

Advertisement