கடையை கொள்ளையடித்த நபரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த உரிமையாளர். ஏன் தெரியுமா ?

0
8276
lalitha
- Advertisement -

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் சில வாரங்களுக்கு முன் சுவரில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது திருட்டு கும்பல். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனைத்தொடர்ந்து இந்த நகை கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டன என்றும் போலீசார் அறிவித்துள்ளது. அதோடு லலிதா நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கொள்ளைக்கார கும்பல் கோடிக்கணக்கான அளவில் தங்கம், வைரம் உள்ளிட்ட பல ஆபரணங்களை கொள்ளையடித்தது அந்த பரபரப்பை மட்டுமில்லாமல் தமிழகத்தையே பரபரப்பாக பேச வைத்தது. தற்போது இவர்களில் இருந்து ஒருவர் பின் ஒருவராக போலீசாரிடம் மாட்டிக் கொண்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக கொள்ளை கும்பலின் தலைவனான ‘முருகன்’ கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

-விளம்பரம்-
lalitha Jewellery

மேலும், பல்வேறு கோணங்களில் காவல்துறை கஸ்டடியில் வைத்து முருகன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இருக்கும் கொள்ளைக்காரனை லலிதா நகை கடை உரிமையாளர்கள் கிரண் குமார் சந்தித்து பேசிய செய்தி வைரலாக பரவி வருகின்றது. நகைக்கடை உரிமையாளர் கிரண் குமார் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னால் போலீஸ் விசாரணையில் இருக்கும் குற்றவாளி முருகனிடம் அரை மணி நேரம் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டு இருந்தார். ஆனால், குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி தர முடியாது என்று மறுத்து விட்டார்கள். மேலும், உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டும் பேச அனுமதி தரப்பட்டது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்யப்போகும் சக போட்டியாளர். யாருனு பாருங்க.

- Advertisement -

அப்போது நகை கடை உரிமையாளர்கள் கிரண் குமார் குற்றவாளியிடம் பேசியது, எனக்கு நகைக்கடைகள் கிளைகள் நிறைய இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருச்சியில் உள்ள நகைக்கடையில் மட்டும் வந்து திருட என்ன? காரணம். அதோடு எந்த சுவற்றில் துளை போட்டால் நகை உள்ள இடத்திற்கு செல்ல முடியும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார். குற்றவாளி கூறியது, நானும் என் மனைவியும் உங்களுடைய நகைக்கடைக்கு 10 முறைக்கு மேல் ஆவது நகை வாங்க வந்திருக்கிறோம். என் மனைவி நகைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் கடையை நான்கு புறமும் கவனித்து எப்படி உள்ளே போக முடியும் என திட்டம் போட்டு இருந்தேன் என்று கூறினார். உடனே நகைக்கடை உரிமையாளர், சரி எனக்கு குழப்பம் தீர்ந்தது. ரொம்ப நன்றி என்று கூறினார். குற்றவாளியும் ஏன்? சார் எனக்கு நன்றி சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

Image result for லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

அப்போது கிரண் குமார் கூறிய பதில் அனைவரையும் நெகிழ வைத்தது என்று சொல்லலாம். அவர் சொன்ன பதில், இல்ல எனக்கு திருட்டு போன நகைகள் பற்றி எல்லாம் கவலை இல்லை. நான் இன்சூரன்ஸ் செய்துள்ளேன். மேலும், அதை விட அதிகமாக சம்பாதிக்கும் தைரியமும், நம்பிக்கையும் எனக்கு உள்ளது. எனது கவலையெல்லாம் ஒன்று தான் இவ்வளவு பெரிய கடையில் நிறைய காவலாளிகள், கேமராக்கள் இருக்கும் போது எப்படி? நீ துளை போட்டு உள்ள வர தைரியம் இருந்தது. என் கடையில் உள்ள யாராவது தான் உனக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று நான் நினைத்து குழம்பி போயிருந்தேன். ஆனால், என் கவலை எல்லாம் எனது கடையில் வேலை பார்ப்பவர்களே திருடுவதற்கு காரணமாக இருப்பார்களா! என்று தான். அப்படி அவர்கள் செய்திருந்தால் என் மீது தான் தவறு இருக்கிறது என்று அர்த்தம்.

-விளம்பரம்-
Image result for லலிதா ஜுவல்லரி

என் கடையில் வேலை செய்பவனுக்கு பணத்தேவை இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை நான் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என பல குழப்பங்களில் இருந்தேன். அதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்று நினைத்து தான் நான் உன்னை தேடி வந்தேன். தற்போது எனக்கு குழப்பம் தீர்ந்து விட்டது என்று கூறினார். இதை பக்கத்தில் இருந்த காவல் அதிகாரி கேட்டு “ராயல் சல்யூட் சார்” என்று கூறினார். இப்படி முதலாளிகள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று தான் நமக்கு தெரியும். இவர்கள் சம்பாதிப்பதற்கு முக்கிய காரணம் தொழிலாளியின் மனநிறைவும், உழைப்பும் தான் காரணம். அதை லலிதா நகை கடை உரிமையாளர் சரியாக புரிந்து கொண்டுள்ளார். மேலும், அவர் தொழிலாளிகளுக்கு சரியாக செய்தால் தான் முதலாளி என்ற தகுதியை பெற முடியும் என்பதை உணர்ந்தவர். ஆகவே தொழிலாளிகளை நல்ல முறையில் வைத்திருப்பது முதலாளிகளின் கடமை என்பது லலிதா நகை கடை உரிமையாளர் செயல் மூலம் தெரிந்தது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement