கிரிக்கெட்டருடன் காதல், வீட்டில் எதிர்ப்பு – தனிமையில் முடிந்த லதா மங்கேஷ்கரின் காதல் கதை

0
403
latha
- Advertisement -

பலரும் அறியாத லதா மங்கேஷ்கரின் காதல் கதை தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான பழம்பெரும் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஹேமா. இவர் 1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கி இருந்தார். அதன் பின்பு இவர் பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார்.

-விளம்பரம்-

தமிழில் கூட இவர் பல பாடலைப் பாடி இருக்கிறார். மேலும், லதா மங்கேஷ்கர் இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர் என்றே சொல்லலாம். அதோடு இவர் இந்தியாவின் இசைக்குயில் என புகழ்பெற்றவர். பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை இவர் மூன்று முறை பெற்று இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தாதா சாகேப், பாரத ரத்னா விருது, பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

மேலும், இவர் பாடகியாக மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்தும் இருந்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜனவரி 8ஆம் தேதி மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பிறகு 28 நாட்களாக இவருக்கு தீவிர தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி லதா இறந்து விட்டார். இவரின் இறப்பு இந்தியாவில் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

மேலும், இவருடைய மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். மகாராஷ்டிர அரசு லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அரசு விடுமுறை அளித்து இருந்தது. மேலும், அவருடைய குரலும் பாடல்களும் இந்தியா முழுக்க தெரியும். ஆனால், இவருடைய காதல் கதை பலருக்கும் தெரியாது. நிறைவேறாத தன்னுடைய காதலால் லதா மங்கேஷ்கர் கடைசிவரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து மறைந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் அவருடைய காதல் கதையை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். லதா மங்கேஷ்கருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். இவருடைய சகோதரர் ஹிருதயநாத் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் உடையவர். கிரிக்கெட் ஆசை லதா மங்கேஷ்கருக்கும் இருந்தது. ராஜ்ஸ்ரீயின் உறவுக்காரர் ராஜ் சிங் துங்கர்பூர். இவர் ராஜஸ்தான் ராஜ வம்சத்தை சேர்ந்தவர். அப்போதைய துங்கர்பூரின் ஆட்சியாளராக இருந்த மஹராவல் லக்ஷ்மண் சிங்ஜியின் மகன் ஆவார். இவருக்கும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம். 1959ம் ஆண்டு ராஜ் சிங் சட்டம் பயில மும்பை வந்திருக்கிறார்.

அப்போது கிரிக்கெட் மூலமாக லதா மங்கேஷ்கரின் சகோதரருடைய நட்பு கிடைத்தது. பின் அவர் அடிக்கடி லதா மங்கேஷ்கரின் வீட்டிற்கு வர ஆரம்பித்திருக்கிறார். லதா மங்கேஷ்கருக்கும் கிரிக்கெட்டின் மீதிருந்த ஆர்வம், ராஜ் சிங்கிற்கு இசையின் மீது இருந்த ஆர்வமும் அவர்களை ஈர்த்தது. அவர்களுடைய நட்பு காதலாக மாறியது. மேலும், படிப்பு முடித்து ராஜ் சிங் வீடு திரும்பினார். லதா மங்கேஷ்கரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை குடும்பத்துடன் தெரிவித்தார் ராஜ் சிங். ஆனால், ஷத்ய வம்சத்தை சேர்ந்த ராஜ் சிங் அரச வம்சத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்று குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், லதா மங்கேஷ்கரின் பாட்டி அவர்களுடைய குடும்பமே தேவதாசி குலத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினரின் எதிர்ப்பால் இருவருமே தங்களுடைய காதலை மறைத்துக் கொண்டார்கள். இறுதிவரை நண்பர்களாக இருப்பது என்று முடிவு செய்தனர். லதா மங்கேஷ்கரைப் போல ராஜ் சிங்கும் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பணியாற்றி இருந்த ராஜ் சிங் 2009 ஆம் ஆண்டு அல்சைமர் நோயால் அவதிப்பட்டு இறந்தார். அவருடைய மறைவிற்கு லதா மங்கேஷ்கர் ராஜஸ்தான் சென்று இறுதி மரியாதை செலுத்தியிருந்தார். இதை பிகேனிர் ராணியான ராஜ்ஸ்ரீ தனது வாழ்க்கை வரலாறு நூலில் குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement