சற்று முன்பு தளபதி 63 குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்.!

0
844
- Advertisement -

சர்கார் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது அட்லீயுடன் இணைந்துள்ளார். தெறி,மெர்சல் படத்திற்கு பிறகு அட்லீயுடன் மூன்றாவது முறையாக இனைந்துள்ளார் விஜய். இந்த படத்தை ஏ இனைந்துள்ளார் எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், விவேக், யோகி பாபு போன்ற முன்னணி காமெடியன்களும் இந்த படத்தில் இருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 

இதையும் படியுங்க : விஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..!ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்?

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்திற்காக நடிகர் விஜய் தனது உடலை படத்திற்காக பயிற்சிகளை எடுத்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

படத்தை பற்றிய தகவல்கள் நீண்ட நாட்களாக வெளியாகாத நிலையில் தற்போது ஏ ஜி எஸ் நிறுவனம் சார்பாக அதிகாரபூர்வ தகவளை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் இந்த படத்தில் இணைத்துள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது ஏ ஜி எஸ் நிறுவனம்.

-விளம்பரம்-
Advertisement