விஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..!ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்?

0
488
Indhuja

சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது ‘விஜய்63 ‘பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்துள்ளார் விஜய். 

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் 
இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜயுடன் நடிக்கவுள்ளார்.மேலும், நயன்தாரா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். 

இதையும் படியுங்க: தளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..!

அதே போல இந்த படத்தில் மேயாதமான்,பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்த  இளம் நடிகை இந்துஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் கமிட் ஆகியிருந்தார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் இந்த படத்தில் இளம் நடிகர் கதிரும் கமிட் ஆகியுள்ளார் என்ற நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. மதயானை கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான கதிர் சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக விஜய்யின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.