தல படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்.

0
242
Nerkonda-Parvai

தல அஜித் அவர்களின் விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் நடித்துக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தீரன் பட இயக்குனரான வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்.

படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் காட்சியாக்கப்பட்டு விட்டதாகவும் என்னும் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீதம் உள்ளதாகவும் பல தகவல் வெளியானது.

அதோடு எந்த படம் மே மாதம் வெளியாகும் என்ற வதந்தியும் உலா வந்துகொண்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து அஜித் அவர்களின் PRO சுரேஷ் சந்தர் அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதவாது போனி கபூர் அவர்கள் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் என கூறியுள்ளார்.

இந்த தட்விட்டர் பதிவுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு சில மணிநேரத்தில் எந்த ட்வீட் விறல் ஆனது.