சிவகார்த்திகேயன்- விக்னேஷ் சிவன் படத்தில் இவர் தான் ஹீரோயின்.! அப்போ படம் ஹிட் தான்.!

0
472
Shivakarthikeyan-Vignesh-Shivan

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டுதான் மிகவும் வெற்றிகரமான ஆண்டு என்றே கூறலாம். அதற்கு காரணம், இந்த ஆண்டு மே 6-க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். சீமா ராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயனின் 17 வது படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூலை மாதம் துவங்க இருக்கிறது. இந்த படத்தை பற்றிய அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஸ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rashmika-Mandana

மேலும், சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.