சூர்யா- சிவா கூட்டணியில் அடுத்த படம்.! ஆனால், இதுதான் பிரச்சனையாக இருக்கிறதாம்.!

0
1139
Surya-Siva
- Advertisement -

சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ‘சிறுத்தை’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவை இயக்குகிறார் சிவா என்கிற செய்தி வந்தது. ஆனால், சிவா அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என பிஸியாகிவிட்டார். சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார்.

-விளம்பரம்-
Image result for siruthai siva surya

‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித்துடன் இணையவிருக்கிறார் சிவா என்ற செய்திகளும் வந்தன. அதற்கு முன், சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. ஆனால், தன் உடல் எடையைக் குறைப்பதற்காக சிகிச்சையில் இருக்கிறார் இயக்குநர் சிவா.

இதையும் படியுங்க : முன்னணி ஹீரோவின் வீட்டின் கதவை தட்டிய சிவா.! இவர் தான் அடுத்த பட ஹீரோவா.! 

- Advertisement -

சிகிச்சை முடிந்து வந்தவுடன், சூர்யாவை இயக்க இருக்கிறாராம். இந்தப் படத்துக்கான ஷூட்டிங், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்குள், ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துவிட்டு, இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த படத்தில் சிவாவிற்கு ஒரு பிரச்னையும் இருக்கிறதாம். பொதுவாக ஹீரோவை தனது படங்களில் மாற்றம் செய்ய அனுமதிப்பதில்லை இயக்குனர் சிவா. அவர் சொன்ன காட்சி, இடத்தில் தான் எடுக்க வேண்டும் என்று இருப்பாராம். ஆனால், சூர்யா தன் படத்தில் அதிகம் தலையிடுவார் என்பதால், இந்த கூட்டணி எப்படி இணையும் என பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement