தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்துதற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதையும் பாருங்க : முத்தக்காட்சிக்கு கிறீன் சிக்னல் கொடுத்துள்ள பிரியா பவானி.! ஆனால், பிகினிக்கு.!
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இந்த படம். மேலும், இந்த படத்தின் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியளராக நடிக்கிறார். இந்த படத்தில் விஜயின் பெயர் மைக்கேல் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது.
இந்த படத்திற்கு ‘சி எம்’, ‘கேப்டன் மைக்கேல் ‘, ‘பிகில்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து விஜய் 63 பணிபுரிந்து வரும் ஒரு முக்கிய பிரபலம் ஹிண்ட் கொடுத்துள்ளார்.
அது என்னவெனில், இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தில் டைட்டில் மிகவும் செமையாக இருக்கும். படத்தின் டைட்டில் இந்த உலகையும் தாண்டி இருக்கும் அந்த பெயரை நீங்கள் அகராதியில் கூட தேட முடியாது என்று கூறியுள்ளார்.
ஏர்கனவே இந்த அப்டேட் குறித்து ட்வீட் செய்துள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர் ‘உங்களை போல நானும் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டுகொண்டே இருக்கும் ஒரு சாதாரண நபர் தான் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். தளபதி 63 யின் அப்டேட் குறித்த நேரத்தில் வெளியாகும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.