தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் . அதில் நடிகர் லாரன்ஸ் பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதுகுறித்து பேசிய லாரன்ஸ் கடவுளுக்கு தெரியும் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று , ஸ்ரீரெட்டி மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர் அளித்துவரும் பேட்டிகளை நான் பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். அவர் மீது நான் பரிதாபம் கொள்கிறேன்.அவரது திறமையை நிரூபித்தால் அந்த இடத்திலேயே மீடியா முன்பு வைத்து எனது அடுத்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் லாரன்ஸை சந்தித்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் , நான் லாரன்ஸ் அவர்களை நல்ல முறையில் அவரது வீட்டில் சந்தித்தேன். மேலும், அவர் எனக்கு ஆடிஷனை வைத்து அடுத்து படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்தார்.
I met Lawrence garu in his home, he received me in a very nice way, I gave an audition,he took me into his next film, he promised me and confirmed a good role,got an advance too. I am Donating this amount to Srikakulam people who suffered from cyclone#SriReddy #SaveSrikakulam
— Sri Reddy (@MsSriReddy) October 17, 2018
மேலும், எனக்கு சில அறிவுரைகளையும் அளித்தார். எனக்கு அந்த படத்தின் மூலம் வரும் பணத்தை புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகுளம் மக்களுக்கு நிதியாக அளித்துவிடுவேன் என்று பதிவிட்டுள்ளார்.