மீண்டும் ஹிந்தி காஞ்சனா ரீ-மேக்கில் லாரன்ஸ்.? அவரே வெளியிட்ட அறிக்கை.!

0
732
- Advertisement -

தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘முனி’ தொடர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் லாரன்ஸ் மற்றும் சரத் குமார் நடித்த காஞ்சனா திரைப்படம் சூப்பர் ஹிட் அடைந்தது. இந்த படத்தை இந்தியில் அக்சய் குமாரை வைத்து ரீ-மேக் செய்ய இருந்தார் லாரன்ஸ்.

Image result for lakshmi bomb akshay kumar release date

இந்த படத்தில் அக்சய் குமாருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளார். மேலும், சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிக்க இருந்தார். இத்தனை ஆண்டுகளில் அமிதாப் பச்சன் திருநங்கையாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க : முன்பெல்லாம் புகைப்படம் தான்.! தற்போது விடியோவோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த யாஷிகா.!

- Advertisement -

படத்திற்கு லட்சுமி பாம் என்று பெயர் வைத்து சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனக்கு தெரிவிக்காமலே வெளியிட்டதால் மரியாதை தரவில்லை என்று இயக்குனர் லாரன்ஸ் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Image may contain: text that says "Hi friends and fans, had tweeted stepping out of the Hindi film 'Laxmmi Bomb' Akshay been requesting to do I'm whelmed with their genuine love. But trust me, I'm equally upset for the past as you are. was very thrilled to do this almost waited to lot of quality pre-production blocked my dates Tomorrow, the Producers are coming to Chennai to meet me. It's completely in their hands now, if I'm given proper self-respect for job, I'll think Let's the meeting. Wanted message all the fans were genuinely concerned. Love, Raghava Lawrence."

இந்த நிலையில் இந்த படத்தை லாரன்ஸ் இயக்குவதற்காக ‘லட்சுமி பாம் ‘ பட குழுவும் படத்தின் தயாரிப்பாளரும் , லாரன்ஸ்ஸை நேரில் சந்தித்து பேச இருப்பதாக நடிகர் லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த சந்திப்பிற்கு பின்னர் லாரன்ஸ் இந்த படத்தை இயக்குவாரா இல்லையா என்பது தெரிந்து விடும்.

-விளம்பரம்-
Advertisement