கசிந்தது கே.வி.ஆனந்த் படத்தின் சூர்யா-மோகன்லால் கேரக்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல்.!

0
236
KV-Anand

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கம் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வனமகன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த நடித்து வருகிறார்.

surya

மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நொய்டாவில் படு மும்மரமாக நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா காரில் இருந்து இறங்கி செல்லும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. அதில் நடிகர் சூர்யா ஷார்ட் ஹேர் கட்டில் படு ஸ்மார்ட்டாக இருந்தார். தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Actor surya

suriya-mohanlal

மேலம், படப்பிடிப்பு தளத்தில் மலையாள நடிகர் மோகன் லால் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது.அந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது மோகன் லால் அரசியல் வாதியாகவோ,பிரதமராகவோ நடிக்கிறார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா,மோகன் லாளுக்கு ஒரு பாதுகாப்பு அதிகரியாக நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.