பிரபல கடையின் குட்டி முதலாளி அருள். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாதா இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை பல கடைகளை வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் நுழைய இருக்கிறார் என்று செய்திகள் பரவி வந்து கொண்டு இருக்கிறது .தனது கடையின் விளம்பரத்திற்காக நடிக துவங்கிய அருள் அண்ணாச்சி பின்னர் தமிழ் சினிமா துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் எதார்தமாக நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்க அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோ தான் என்று களமிறப்பிகியுள்ளார் அருள்.இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்குகின்றனர். இவர் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி என்று கூறப்படுகிறது. முதல் படமே இத்தனை கோடி பட்ஜெடடா என்று கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாயை பிளந்துபார்த்தனர். மேலும், இது வதந்தி என்று பலரும் கூறி நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜையை துவங்கி அனைவரின் வாயையும் அடைத்தார் நம்ம அருள் அண்ணாச்சி.
படத்தின் பாடல்கள், டீசர், டிரையலர் அனைத்துமே வைரல் :-
தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும். ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் அளவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்தப் படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். அதற்கான அறிவிப்பை சரவணா ஸ்டோர் அண்ணாச்சி மற்றும் அன்பு செழியன் இணைந்து வெளியிட்டனர். இந்த திரைப்படத்தில் அண்ணாச்சியுடன் ஊர்வசி உஜ்வாலா நாயகியாக நடித்துள்ளார். அதேபோல் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
மூன்று நாளில் இவ்வளவு பாலேவர்ஸ்சா :-
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் லெஜண்ட் சரவணன், சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் இணைந்தார். அவர் இணைந்த சில நாட்களில் 112K பாலோவர்ஸ் பெற்றுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாக இருக்கும் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு அவரின் பாலோவர்ஸ் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.பலரும் வயதான காலத்தில் இது எதுக்கு , அனிமேஷன் பொம்மை என விமர்சித்தாலும். பெருமான்மையுனர் அவரின் கான்பிடன்ஸ் படித்துள்ளாதாகவும் கண்டிப்பாக படம் பார்ப்போம் என அண்ணாச்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
முதல் படத்திலேயே இவ்வளவு பெருமையா :-
மேலும், “என் கணிப்பின்படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். அதன்படி, தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட இருக்கிறார். முதல் படத்திலியே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம் மற்றும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தி லெஜண்ட் கிடைத்த அதிர்ஷ்டம் :-
‘தி லெஜண்ட்’ ரிலீஸாகும் ஜூலை 28 அன்று அதாவது நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளது. சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அதே தினத்தில் ரிலீசாகும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.