‘நாயகன் மீண்டும் வரான்’- படு மாஸாக புதிய கெட்டப்பில் வந்து புதுமண தம்பதியை வாழ்த்திய லெஜெண்ட் – இதோ வீடியோ.

0
715
Annachi
- Advertisement -

புதிய லுக்கில் எம்ஜிஆர் கெட்டப்பில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு என்ட்ரி கொடுத்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தி லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கதையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.

-விளம்பரம்-

இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை உருவாக்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு தற்போது இவர் நடிக்கும் படம் ரொமான்ஸ் கதை அம்சத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது

-விளம்பரம்-

சரவணன் அருள் புதிய லுக் புகைப்படம்:

மேலும், இந்த படத்தில் சரவணன் அருள் யூத் ஆக நடிக்கிறாராம். இதனால் சரவணன் அண்ணாச்சி அவர்கள் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை பயங்கரமாக குறைத்து இருக்கிறார். சமீபத்தில் அண்ணாச்சியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. அதில் அவர், கூலர்ஸ், மஞ்சள் நிற கோட், சூட் என்று எம்ஜிஆர் லுக்கிங் படும் மாஸாக இருந்தார்.

மாஸ் என்ட்ரி கொடுத்த அண்ணாச்சி :

அது மட்டும் இல்லாமல் ரஜினி உடைய பேவரட் லுக் என பலவிதமான கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து, இது அடுத்த படத்திற்கான லுக்கா! என்று கேட்டு வந்தனர். து மட்டும் அதுமட்டுமில்லாமல் எம் ஜி ஆர்,அல்லு அர்ஜுன், சிபி ராஜ் என்று பலருடனும் ஒப்பிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இதே லுக்கில் நிகழ்ச்சி ஒன்றிற்க்கு படு மாஸாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement