கனா காணும் காலங்கள் 2வில் இருந்து விலகிய மலர் டீச்சர் – அவரே சொன்ன காரணம் இதோ.

0
1510
- Advertisement -

இனி கனா காணும் காலங்கள் 2 சீரியலில் நான் இல்லை. காரணம் இதுதான் என்று நடிகை சங்கீதா பகிர்ந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள் தொடர் தான். இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரண்டு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

கனா காணும் காலங்கள் 2:

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என நம்முடைய பள்ளி நினைவுகளை நினைவூட்டும் வகையில் இந்த சீசன் இருக்கிறது. அதில் பள்ளி ஆசிரியையாக சங்கீதா நடித்திருக்கிறார். சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சங்கீதா. சன் மியூசிக்கில் இருக்கும்போது இவருக்கு என்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்தது. பின் செந்தமிழ் பெண்ணே, பிராங்கா சொல்லடா, லேடிஸ் சாய்ஸ் என்று பல நிகழ்ச்சிகளை சங்கீதா தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்குப்பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்ற அழகு தொடரில் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் அழகான வில்லியாக மிரட்டி இருந்தார்.

சங்கீதா குறித்த தகவல்:

2017ஆம் ஆண்டில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் அழகு. இந்த தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா, காயத்ரி ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். கொரோனா காரணத்தால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. பின் இவர் அன்பே வா சீரியலில் வில்லியின் தங்கை அன்பே மிரட்டி இருந்தார். தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரியலில் நடித்திருக்கிறார். இதில் இவர் பாசிட்டிவ் ரோலில் நடித்து இருந்தார். இவருடைய மலர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இவர் கனா காணும் காலங்கள் 2வில் இருந்து விலகி இருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய சங்கீதா:

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது சங்கீதாவிற்கு பதிலாக பர்வீன் என்பவர் மலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சங்கீதா சீரியலில் இருந்து விலகியது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கனா காணும் காலங்கள் சீரியலில் மலரில் இருந்து நான் விடைபெறுகிறேன். மலர் மீது அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நானும் உங்களை போலவே மலரை மிஸ் செய்கிறேன். சீசன் 2 வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி சூட் ஸ்டார்ட் பண்ணினார்கள். அந்த சமயத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

சீரியலில் இருந்து விலக காரணம்:

அவர்கள் கேட்கும்போது என்னால் சூட்டுக்கு போக முடியவில்லை. எனக்காக அவர்களும் வெயிட் பண்ணி பார்த்தார்கள். உடல்நிலை சரியாக டைம் தேவைப்பட்டது. அவர்களுக்கும் சூட் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் என்னுடைய கேரக்டருக்கு ரீப்ளேஸ்மென்ட் பண்ணிட்டாங்க. மலரை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். இதற்கு முன் நான் நெகட்டிவ் ரோலில் பண்ணிட்டு இருந்தேன். நான் முதன்முதலாக மலர் டீச்சரில் தான் பாஸ்டிவ் ரோல் பண்ணேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமான அன்பை எனக்கு கொடுத்தார்கள். வேறு வழியில்லாமல் தான் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி விட்டேன். சீசன் 2 நமக்கானது இல்லை என்கிற மைண்ட் செட்டுக்கு நான் வந்து விட்டேன். அடுத்து பண்ண போகிற ப்ராஜெக்ட் கண்டிப்பா நெகட்டிவ் ரோல் கிடையாது. அதை ரொம்பவே உறுதியாக சொல்லுவேன். சீக்கிரமே அடுத்த ப்ராஜெக்ட் பற்றி அப்டேட் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement