புதிய லுக்கில் எம்ஜிஆர் கெட்டப்பில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மிரட்டி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தி லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கதையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.
@Sibi_Sathyaraj bro neengala🤣😅😂 pic.twitter.com/EH5YvKQMWG
— Divakar Leo🦁 (@divakarmaster) March 13, 2023
இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை உருவாக்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
தி லெஜன்ட் படம்:
இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது.
தி லெஜன்ட் படம் விமர்சனம்:
இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு தற்போது இவர் நடிக்கும் படம் ரொமான்ஸ் கதை அம்சத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சரவணன் அருள் யூத் ஆக நடிக்கிறாராம்.
சரவணன் அருள் புதிய லுக் புகைப்படம்:
இதனால் சரவணன் அண்ணாச்சி அவர்கள் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை பயங்கரமாக குறைத்து இருக்கிறார். இந்த நிலையில் அண்ணாச்சியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் அவர், கூலர்ஸ், மஞ்சள் நிற கோட், சூட் என்று எம்ஜிஆர் லுக்கிங் படும் மாஸாக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரஜினி உடைய பேவரட் லுக் என பலவிதமான கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
வைரலாகும் புகைப்படம்:
தற்போது லெஜெண்ட் சரவணனின் இந்த புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து, இது அடுத்த படத்திற்கான லுக்கா! என்று கேட்டு வருகின்றனர். அது மட்டும் அதுமட்டுமில்லாமல் எம் ஜி ஆர்,அல்லு அர்ஜுன், சிபி ராஜ் என்று பலருடனும் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும், விஜய் நடித்து வரும் லியோ படத்தில் சரவணன் அருள் நடிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கள் நிலவி வருகிறது. ஆனால், இது குறித்து லியோ பட குழு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.