லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இரங்கி இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஷியாம், அறந்தாங்கி நிஷா, அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ், பாயல் என பலரும் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் 3ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
லீடர் படம்:
இதில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவான சரவணன், உலகம் முழுக்க போர் மேகங்கள் சூழ்ந்து இருக்கிறது. மக்கள் அமைதி உடனும் பாதுகாப்புடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன். என்னுடைய இரண்டாவது படமான லீடர் வருகிற ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஒரு அப்பா- மகள் பாச பிணைப்பிற்குள் ஒரு கேங்ஸ்டர்ஸ் நுழையும்போது ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இயக்குனர் துரை செந்தில்குமார் தன்னை முழுமையாக அர்ப்பணித்து இந்த படத்தை செய்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=PQzuMEk0-eY
சரவணன் பேட்டி:
இந்த படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான் அரை மணி நேரம் பாராட்டியது மறக்கவே முடியாது. ஜார்ஜியா ஏர்போர்ட்டில் -14 டிகிரி கடும்குளூரில் கை கால்கள் மறுத்துப்போகும் சூழலில் 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்ஸ் காட்சிகள் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடன் சின்ன ரயில் பெட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இருந்தாலும் ஆயிரக்கணக்கான டெக்னிசீனியன்ஸ் காத்திருப்பதால் ஊசி போட்டுக்கொண்டு மீண்டும் நடித்தேன். அந்த எனர்ஜி எங்கிருந்து வந்தது தெரியவில்லை. லால் சார் ஒரு ஜீனியஸ். அவருடன் நடித்தது சவாலாக இருந்தது. ஆண்ட்ரியா மிக சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=Cc_6LxAq0-8
படம் பற்றி சொன்னது:
ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பு படத்திற்கு பலம். விடிவி கணேசன் காமெடி எங்களை சிரிக்க வைத்தது. இதனால் பல டேக்குகள் போனது. இந்த படத்தை பார்த்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் பிரம்மாண்டமாக இருப்பதாக சொல்லியிருந்தார்கள். ஜெயிலிர், விக்ரம், லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் லீடர் படமும் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த படத்தில் எனக்கு பிடித்த ஒரே வசனம், கடவுள் எதையும் நேரடியாக செய்வதில்லை நல்ல மனிதர்கள் மூலமாக செய்கிறார். அவர்களை நம்புங்கள், என்னையும் நம்புங்கள். இந்த கோடை விடுமுறையை லீடர் படத்துடன் கொண்டாடுங்கள் என்று கூறியிருக்கிறார்.






