இது நல்ல முடிவு தான் – லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானது குறித்து தயாரிப்பாளர் சொன்ன விளக்கம்.

0
396
- Advertisement -

விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். .
இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

லியோ படம்:

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. மேலும், இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். மேலும், வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா:

பின் சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்றும் திமுக பிரச்சனை செய்கிறது என்றும் சர்ச்சை எழுந்து இருந்தது. ஆனால், அது பொய் என்று 7 ஸ்கிறீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் கூறி இருந்தது. இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் பலவிதமாக சோசியல் மீடியாவில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

இசை வெளியீட்டு விழா ரத்து:

அதில் சிலர் இது அரசியல் காரணமாக இருக்கலாம் என்றும் கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் டீவ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வெறும் 6000 பேர் மட்டுமே வரலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிக கூட்டம் அந்த இடத்திற்கு வந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்றும் பட குழுவிற்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று தான் விழாவை ரத்து செய்து இருக்கிறார்கள். இது ஒரு நல்ல முடிவு என்று கூறியிருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசைக்கச்சேரி பிரச்சனை:

ஏற்கனவே இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியில் நடந்த அசம்பாவிதம் அனைவரும் அறிந்ததே. முறைப்படி அனைவரும் பதிவு செய்து டிக்கெட் வாங்கியும் அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை . அப்படியே உள்ளே சென்றவர்களுக்கு பாதுகாப்பில்லை. பல பிரச்சினைகள் நடந்தது. பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இது தொடர்பாக பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே ஏ ஆர் ரகுமானை விமர்சித்தும் இசை கச்சேரி குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement